Latest News :

பிரம்மாண்ட பேய் படம் மூலம் மிரட்ட வரும் பூர்ணா!
Tuesday April-17 2018

‘சவரக்கத்தி’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்ற பூர்ணா, இதுவரை பேய் படங்களில் நடித்திருக்கும் பிரபலங்களை மிஞ்சும் அளவுக்கு பேய் படம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

 

தெலுங்கில் ‘ராட்சஷி’ என்ற பெயரில் வெளியான மாபெரும் வெற்றிப் படம் தற்போது தமிழில் ‘குந்தி’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதில் ஹீரோயினாக நடித்திருக்கும் பூர்ணாவுக்கு இப்படம் திரையுலக வாழ்கையில் ஒரு மயில்கல், என்று பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் பூர்ணாவின் வாழ்வில் திடீரென ஒரு அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடக்கிறது. ஒரு பேய் தனது குழந்தைகளை கொள்ள துடித்துக் கொண்டிருக்க அந்த பேயிடம் இருந்து எப்படி குழந்தைகளை காப்பாற்றினார் என்பது தான் இந்த படத்தின் திரைக்கதை.

 

அருந்ததி, சந்திரமுகி, முனி, காஞ்சனா போன்ற படங்களை மிஞ்சும் அளவுக்கு உருவாகியுள்ள இப்படம் தமிழ் சினிமாவின் அடுத்த பிரம்மாண்டமான பேய் படமாகவும் உருவாகி வருகிறது.

 

அன்னை திரைக்களம் சார்பில் மே.கோ.உலகேசுகுமார், மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம் இணைந்து தயாரிக்க, எஸ்.எப்.எப் டிவி வழங்கும் ‘குந்தி’ படத்தில் பூர்ணாவுக்கு ஜோடியாக அபினவ் நடித்திருக்கிறார். ஆடுகளம் கிஷோர், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வில்லனாக நடித்த அபிமன்யூ சிங் மற்றும் பேபி தன்வி, பேபி கிருத்திகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

 

கர்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யஜமன்யா இசையமைக்க, எஸ்.எப்.எப் டிவி காளிராஜ், சந்திரபிரகாஷ் ஆகியோர் எடிட்டிங் செய்துள்ளனர். வலங்கைமான், நூர்தின், முருகானந்தம், வள்ளுவர் தேவன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். பண்ணா ராயல் இயக்கியிருக்கும் இப்படத்தின் தமிழ் வசனம் மற்றும் ஒருங்கிணைப்பை ஏ.ஆர்.கே.ராஜராஜா செய்து வருகிறார்.

Related News

2411

”அப்பாவுக்கு கொடுத்த இடத்தை உங்களுக்கும் தருவார்கள்” - ஆகாஷுக்கு நம்பிக்கை அளித்த சிவகார்த்திகேயன்
Saturday January-04 2025

எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘நேசிப்பாயா’...

பிரபலங்கள் வெளியிட்ட ‘உசுரே’ படத்தின் முதல் பார்வை போஸ்டர்!
Thursday January-02 2025

ஸ்ரீ கிருஷ்ண புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...

கவனம் ஈர்க்கும் ‘எமகாதகி’ முதல் பார்வை போஸ்டர்!
Wednesday January-01 2025

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...

Recent Gallery