நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வரும் சினேகாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை வளர்ப்பு நடிப்பு என்று இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் சினேகா, தற்போது தனது உடல் எடையை குறைப்பதற்கான உடற்பயிற்சியிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில், சினேகா - பிரசன்னா ஜோடி ஆர்யாவின் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அப்போது சினேகா குறித்து பேசிய பிரசன்னா, “சினேகா மட்டும் இல்லை, நான் அனைத்து பெண்களையும் அதிகம் மதிக்கிறேன். குழந்தை பெற்றெடுக்கும் போது அவர்கள் படும் வலியை நேரில் பார்த்ததால் தான். சினேகா பிரசவத்தின் போது நார்மல் டெலிவரி ஆகவில்லை. அதனால் வலியை அதிகரிக்க ஒரு ஊசி போட்டார்கள். அதை பார்த்ததும் எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. அவ்வளவு பெரிய நீடில்.
சும்மா தலைவலி வந்தாலே தாங்க முடியாது, ஆனால் இந்த வலியை ஒவ்வொரு அம்மாவும் எப்படி தாங்கினார்கள் என நினைத்தால் அவர்களை தெய்வமாக மதிப்போம்.” என்று தெரிவித்தார்.
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘நேசிப்பாயா’...
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...