வித்யா பாலன் நடிப்பில் இந்தியில் வெற்றிப் பெற்ற ‘துமாரி சுலு’ படத்தின் தமிழ் ரீ மேக்கில் ஜோதிகா நடிக்கிறார் என்பதும், அவருக்கு ஜோடியாக விதார் நடிக்க இருப்பதும், அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், அறியாதது இப்படத்தின் தமிழ் தலைப்பு.
இப்படத்திற்கு தலைப்பு வைத்திருக்கும் படக்குழு அதனை ஒரு போட்டி மூலம் வெளியிட முடிவு செய்துள்ளது. அதன்படி, இப்படத்தின் தலைப்பை யூகித்து சரியாக சொல்லுபவர்களை, இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துச் செல்ல இருக்கிறார்களாம்.
இந்த படத்தின் தலைப்பு இரு வார்த்தைகளை கொண்டதாகவும், ஒரு வார்த்தை ராதாமோகன் மற்றும் ஜோதிகாவுடன் தொடர்புடையதாகவும், மற்றொரு வார்த்தை எஃப்.எம் ரேடியோவின் பெயராக இருக்கும், என்றும் க்ளூவும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டில் பங்கேற்பவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சரியான விடையை சொல்பவர்களில் 10 பேர்களை தேர்வு செய்து அவர்களை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துச் செல்வதோடு, அவர்கள் ஒருநாள் முழுவதும் படப்பிடிப்பு தளத்தில் இருக்கவும் அனுமதிக்கப்படுவார்கள். மேலும், நடிகர் நடிகை மற்றும் படக்குழுவினருடன் புகைப்படமும் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த போட்டிக்கான காலக்கெடு ஏப்ரல் 20 ஆம் தேதி மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. அதன் பின்னர் படத்தின் தலைப்பை பிரபலம் ஒருவர் மூலம் படக்குழுவி அறிவிக்க உள்ளது.
ஆட்டத்தில் பங்குபெற நினைப்பவர்கள் இந்த லிங்கை க்ளிக் செய்யவும் : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfJq1N-sPDPy4T-dbbUJZ_dpYgkrH2DBgD-iLz7yQO19A9G3g/viewform
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘நேசிப்பாயா’...
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...