விஜய் தொலைக்காட்சியின் பேவரைட் தொகுப்பாளராக இருக்கும் ஜாக்குலின், கல்லூரி படிக்கும் போதே தொகுப்பாளினியாகி கலக்கி வருகிறார். தற்போது திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ள இவர் காதலில் விழுந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது நண்பர் ஷாம் என்பவரை ஜாக்குலின் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், இதை மறுத்திருக்கும் ஜாக்குலின், இது குறித்து வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தற்போதைக்கு நான் சிங்கிள் தான், யாரையும் காதலிக்கவில்லை.
நானும் ஷாமும் நல்ல நண்பர்கள், நாங்கள் இன்ஸ்டாவில் பேசிக்கொள்வதை பார்த்து எல்லோரும் காதலிப்பதாக கூறுகிறார்கள், என்று தெரிவித்துள்ளார்.
தற்போது நயந்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயந்தாராவுக்கு தங்கை வேடத்தில் நடித்து வரும் ஜாக்குலினை ஹீரோயினாக நடிக்க வைக்க சிலர் அவரிடம் கதை சொல்கிறார்களாம். அனைவருக்கும் நோ சொல்லும் ஜாக்குலின் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் ரிலீஸுக்கு பிறகே சினிமாவில் அடுத்தக்கட்டத்திற்கு அடியெடுத்து வைக்க திட்டமிட்டுள்ளாராம்.
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘நேசிப்பாயா’...
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...