ஸ்ரீ ரெட்டி என்ற நடிகையால் தெலுங்கு திரையுலகமே ஆடிபோய் இருக்கிறது. பிரபல இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் அந்தரங்க தகவல்களை வெளியிட்டு வரும் அவர், பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு சினிமாவில் அதிகைத்து வருவதாக குற்றம் சாட்டி வருவதோடு, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியும் வருகிறார்.
தற்போது, ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து நேரடியாக டிவி சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள். இதனால், தெலுங்கு சினிமா நடிகர்கள் பல பீதியடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், அம்மா உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் பிரபல தெலுங்கு நடிகையான சந்தியா நாயுடு, பகலில் அம்மா என்று அழைத்துவிட்டு இரவில் படுக்கைக்கு அழைக்கிறார்கள், என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சந்தியா நாயுடு, ”பகலில் என்னை அம்மா என்று அழைத்துவிட்டு இரவில் படுக்கைக்கு வருமாறு கூறுகிறார்கள். வீட்டிற்கு சென்றதும் வாட்ஸ்ஆப் மூலம் அவர்களுடன் சாட் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள்.
விருப்பம் இல்லாவிட்டாலும் வாட்ஸ்ஆப்பில் சாட் செய்ய வேண்டி உள்ளது. ஒருவர் வாட்ஸ்ஆப் சாட்டின் போது நான் என்ன உடை அணிந்திருக்கிறேன், அது லேசான துணியா என்று கேட்டார்.” என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார்.
கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் உள்ள நடிகை சந்தியா நாயுடு பல முன்னணி ஹீரோக்கள் படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘நேசிப்பாயா’...
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...