நடிப்பு, திரைப்பட தயாரிப்பு, ஓட்டல் பிசினஸ் என்று பிஸியாக இருக்கும் ஆர்யா, திடீரென்று டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது என்றாலும், அதற்கு பின்னணியில் பல கோடி வியாபாரம் இருப்பது அனைவரும் அறிந்ததே.
‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற தலைப்பில் ஆர்யாவின் திருமணத்தை மையமாக வைத்து ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியின் முடிவில் ஆர்யா திருமணம் செய்துக்கொள்வாரா, மாட்டாரா, என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடமும் இருந்தாலும், ஆர்யா இதன் மூலம் திருமணம் செய்துக்கொள்ள மாட்டார், என்பது கடந்த சில நாட்களுக்கு முன்பே தெரிந்துவிட்டது.
இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் இறுதி நாளில், ஆர்யா யாரையும் திருமணம் செதுக்கொள்ள மாட்டேன், என்று அதிகாரப்பூர்வமாக கூறிவிட்டார்.
ஒருவரை மட்டும் திருமணம் செய்துக்கொள்ள சம்மதித்தால், மற்ற பெண்கள் மனது கஷ்டப்படும், என்று கூறிய ஆர்யா, ஒரு கட்டத்தில் அழுதுவிட்டார். ஆர்யா என்றாலே ரொம்ப ஜாலியானவர், எப்போதும் மற்றவர்களை கலாய்த்துக் கொண்டு சந்தோஷமாக இருப்பவர், என்பது தான் தெரியும். ஆனால், அவரும் அழுவார் என்பதை டிவி சேனல் மூலம் மக்கள் தெரிந்துக் கொண்டார்கள்.
இதுபோன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளர்கள் அழுவது என்பது சகஜமான ஒன்றுதான் என்றாலும், ஆர்யா அழுவார் என்பது யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘நேசிப்பாயா’...
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...