ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் தெலுங்கு திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநர்கள் குறித்து சில அந்தரங்க தகவல்களை வெளியிட்டு வரும் நடிகை ஸ்ரீரெட்டிக்கு பெண்கள் அமைப்பும், சில நடிகைகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்கள் ஒன்றாக சேர்ந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியும் கொடுத்து வருகிறார்கள்.
இதற்கிடையே, சமூக ஆர்வலரான சந்தியா என்பவர், டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, நடிகை ஜீவிதா தனது கணவர் நடிகர் டாக்டர் ராஜசேகரின் செக்ஸ் ஆசையை தீர்க்க இளம் பெண்களை மிரட்டி படுக்கைக்கு அனுப்புகிறார், என்று தெரிவித்தார். அவரது இந்த தகவலால் தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள நடிகை ஜீவிதா, தனது கணவரின் படுகைக்கு பெண்களை நான் அனுப்புவதை சந்தியா பார்த்தாரா, அவரால் அதை நிரூபிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ள ஜீவிதா, சந்தியா கூறியதில் எதுவும் உண்மை இல்லை. சந்தியா தனது புகாரை நிரூபிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். சந்தியா மற்றும் அந்த விவாத நிகழ்ச்சியை நடத்திய டிவி சேனல் மீது அவதூறு வழக்கு தொடரப் போகிறேன்.
திரையுலக பிரபலங்கள் என்றால் மிகவும் சீப்பானவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் சந்தியா. யாரையும் கட்டாயப்படுத்தி படுக்கைக்கு அழைத்துச் செல்ல அவர்கள் ஒன்றும் குழந்தை அல்ல.
கதுவா சிறுமிக்கு நடந்தது என்னவென்று தெரியாத வயது. ஆனால் பிரபலங்கள் மீது புகார் கூறும் பெண்கள் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள். அவர்களுக்கு விவரம் தெரியும். அவர்கள் ஒன்றும் பாப்பா கிடையாது.
பல ஆண்டுகளாக அவரை ஏமாற்ற ஸ்ரீ ரெட்டி ஒன்றும் குழந்தை இல்லையே. அவருக்கு என்ன தேவை என்று தெரியவில்லை. ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட ஸ்ரீ ரெட்டியின் இந்த வீடியோவை பாருங்கள் என்று செய்தியாளர்களிடம் ஒரு வீடியோவை தனது செல்போனில் காண்பித்தார் ஜீவிதா.
ஜீவிதா காண்பித்த வீடியோவில் ஸ்ரீ ரெட்டி, தான் 24 மணிநேரமும் செக்ஸி மூடிலேயே இருப்பதாக கூறியுள்ளார். இதை பார்த்த பிறகுமா ஸ்ரீ ரெட்டியின் பேச்சை நம்புகிறீர்கள், என்று ஜீவிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அவர் சொன்னது போலவே சந்தியா மற்றும் டிவி சேனல் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘நேசிப்பாயா’...
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...