சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தெய்வ மகள்’ சீரியல் மூலம் தமிழக மக்களின் உள்ளத்தில் இடம் பிடித்தவர் வாணி போஜன். சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள வரை அனைவரையும் கவர்ந்தவருக்கு ஏகப்பட்ட சினிமா வாய்ப்புகளும் வருகின்றனவாம். ஆனால், எதையும் பொருமையாக செய்ய வேண்டும் என்று, நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
இந்த நிலையில், நடிகை வாணி போஜன் இன்ஹேலருக்கு அடிமையானவர் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
அதாவது, அவருக்கு டஸ்ட் அலர்ஜி நோய் இருக்கிறதாம். அதனால், அவருக்கு அடிக்கடி மூச்சு திணறல் பிரச்சினை ஏற்படுமாம். அதற்காக அவர் இன்ஹேலரை பயன்படுத்துவாராம். அதற்காக எப்போதும் தன் பையில் இன்ஹேலரை அவர் வைத்திருப்பாராம்.
ஆரம்பத்தில் அதிக மூச்சு திணறல் ஏற்பட்டால் மட்டுமே இன்ஹேலரை பயன்படுத்தி வந்த வாணி போஜன், தற்போது சாதாரணமாக இருக்கும் போது கூட இன்ஹேலரை பயன்படுத்த தொடங்கி விட்டாராம். மொத்தத்தில், இன்ஹேலருக்கு அவர் அடிமையாகவே ஆகிவிட்டாராம்.
இந்த தகவலை நடிகை வாணி போஜனே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அவரது இத்தகைய நிலையை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஜீவா, ராஷி கண்ணா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில், பா...
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, 2013 ஆம் ஆண்டு வெளியாக இருந்த திரைப்படம் ‘மதகஜராஜா’...
உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மோர் 4 புரொடக்ஷன்ஸ் (More 4 Production) தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘கண்நீரா’...