’தரமணி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான வசந்த் ரவி, தனது முதல் படத்திலேயே அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார். தற்போது இரண்டாம் படத்திற்கு தயாரகியுள்ள அவர், அறிமுக இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இயக்குநர் தியாகராஜ குமாரராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அருண் மாதேஷ்வரன், ’இறுதிசுற்று’ படத்திற்கு வசனம் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.ஏ ஸ்டுடியோஸ் சார்பாக சி.ஆர்.மனோஜ்குமார் தயாரிக்கும் இப்படம் பிரம்மாண்ட ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகிறது. இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் ஒவ்வொன்றையும் வித்தியாசமான வகையில் காட்டுவதற்காக திலீப் சுப்பராயண் மாஸ்டர் பல புதிய யுக்திகளை கையாண்டு வருகிறாரம். தர்புகா சிவா இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை வைரமுத்து, கபேர் வாசுகி ஆகியோர் எழுதுகிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, நாகூரான் படத்தொகுப்பு செய்கிறார். ராமு கலை துறையை கவனிக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஜீவா, ராஷி கண்ணா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில், பா...
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, 2013 ஆம் ஆண்டு வெளியாக இருந்த திரைப்படம் ‘மதகஜராஜா’...
உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மோர் 4 புரொடக்ஷன்ஸ் (More 4 Production) தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘கண்நீரா’...