தமிழ் தொலைக்காட்சிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சியாக தான் இருக்கும். டிவி பார்க்காதவர்களை கூட இந்த நிகழ்ச்சி டிவி முன் உட்காரை வைத்தது தான் இதன் வெற்றியாகும்.
ரசிகர்களை மட்டும் இன்றில் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களின் வாழ்க்கையையும் இந்த நிகழ்ச்சி மாற்றி அமைத்தது. பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ஓவியா, இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் பிரபலங்களில் ஒருவராக மாறினார். அதுமட்டும் இன்றி, விளம்பர படங்கள், திரைப்படங்கள் என்று வாய்ப்புகள் குவிய தொடங்கியது. ஓவியா மட்டுமா?, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சாதாரணமான பெண்ணான ஜூலி, தற்போது செலிபிரிட்டியானதோடு, பல லட்சங்களை சம்பாதித்து வருகிறார்.
கடை திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், சினிமா, டிவி நிகழ்ச்சிகள் என்று பிக் பாஸ் போட்டியாளர்கள் படு பிஸியாகியிருப்பதால், பிக் பாஸ் சீசன் 2-வில் பங்கேற்க பல முன்னணி நட்சத்திரங்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்களாம். விரைவில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் 2 -வில் மீண்டும் ஓவியா பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஓவியாவுடன், ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சியின் மூலம் சர்ச்சையில் சிக்கிய ஆர்யாவும், ஜெயம் ரவியும் பங்கேற்க உள்ளார்களாம்.
பிக் பாஸ் முதல் பாகத்தில் பாதியிலேயே வெளியேற்றப்பட்ட ஓவியா, இரண்டாம் பாடகத்தில் பங்கேற்றால் நிகழ்ச்சி விறுவிறுப்படையும் என்று கருதிய நிகழ்ச்சி குழு, அவருடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஜீவா, ராஷி கண்ணா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில், பா...
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, 2013 ஆம் ஆண்டு வெளியாக இருந்த திரைப்படம் ‘மதகஜராஜா’...
உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மோர் 4 புரொடக்ஷன்ஸ் (More 4 Production) தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘கண்நீரா’...