பிரபல மலையாள நடிகை பாவனாவை காரில் கடத்தி கற்பழித்த சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவ்வழக்கு தொடர்பாக பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டது, மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பாவனா சம்பவம் போன்று தெலுங்கு திரையுலகிலும் ஒரு சம்பவம் நடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஐதராபாத்தை சேர்ந்த இளம் நடிகை ஒருவர் தெலுங்கு படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். இவரிடம் நடிகர் சுஜன், இயக்குநர் ஜலபதி ஆகியோர் கதாநாயகி வாய்ப்பு தருவதாக கூறி உள்ளனர்.
மேலும், விஜயவாடா அடுத்து உள்ள பீமாவரத்தில் நடைபெறும் சினிமா படப்பிடிப்புக்கு வரும்படி அந்த நடிகையை அழைத்துள்ளனர். இதையடுத்து நடிகை தனது காரில் ஐதராபாத்தில் இருந்து பீமாவரத்துக்கு சென்றார். வழியில் நடிகர் சுஜன், இயக்குநர் ஜலபதி ஏறி கொண்டனர். காரை ஜலபதி ஓட்டி சென்றார்.
அப்போது நடிகையிடம் இருவரும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. நடிகை கூச்சலிட்டபடி அவர்களை திட்டி உள்ளார்.
இதனால் கார் திடீரென்று தாறுமாறாக ஓடி லாரி மீது மோதியது. இதில் நடிகை காயம் அடைந்தார். உடனே நடிகர் சுஜன் தப்பி விட்டார்.
இந்த சம்பவம் குறித்து நடிகை தனது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாட்ஸ்-அப்பில் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அங்கு வந்தவர்களை அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பிறகு இந்த சம்பவம் குறித்து நடிகை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், காரில் இயக்குநரும், நடிகரும் தன்னை கற்பழிக்க முயன்றதாகவும், அப்போது தான் லாரி மீது கார் மோதிவிட்டது. பிரகு என்னிடம் அவர்கள் மன்னிப்பு கேட்டு போலீசில் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள், என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், இதை மறுக்கும் இயக்குநர் ஜலபதி, கார் விபத்தில் சிக்கியதால் எங்களிடம் நடிகை பணம் கேட்டார். நாங்கள் தர மறுத்ததால் பாலியல் புகார் கொடுத்து உள்ளார், என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...