விஜய் ஆண்டனி நடிப்பில், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காளி’ விரைவில் வெளியாக உள்ள நிலையில், விஜய் ஆண்டனியின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
ஓவியா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘மூடர் கூடம்’ படத்தை இயக்கிய நவீன் இயக்கத்தில் தான் விஜய் ஆண்டனி அடுத்ததாக நடிக்க இருக்கிறார். இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கிறார். இவர் தயாரிக்கும் 23 வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் தலைப்பு வைக்காத இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் முதல் தொடங்குகிறது.
ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஜீவா, ராஷி கண்ணா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில், பா...
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, 2013 ஆம் ஆண்டு வெளியாக இருந்த திரைப்படம் ‘மதகஜராஜா’...
உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மோர் 4 புரொடக்ஷன்ஸ் (More 4 Production) தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘கண்நீரா’...