‘நாச்சியார்’ படத்திற்குப் பிறகு ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தியில் பெரும் வெற்றி பெற்ற வித்யா பாலனின் ‘துமாரி சூலு’ படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம்.
இப்படத்திற்கான தலைப்பு வைப்பதில் ரசிகர்களையும் இணைத்துக் கொண்ட தயாரிப்பு தரப்பு, சரியான தலைப்பு சொல்லுபவர்களில் பத்து பேரை தேர்வு செய்து அவர்களை, படப்பிடிப்பு தளத்தில் ஒரு நாள் முழுவதும் இருக்க அனுமதிப்பதோடு, ஜோதிகா உள்ளிட்ட நடிகர் நடிகைகளுடன் புகைப்படமும் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள், என்று அறிவித்திருந்தது. எத்தனை பேர் இதில் பங்கேற்று சரியான பதிலை சொன்னார்கள், என்று தெரியவில்லை. ஆனால், படத்தின் தலைப்பை படக்குழுவே தற்போது வெளியிட்டுள்ளது.
’காற்றின் மொழி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்து பெரும் வெற்றிப் பெற்ற ‘மொழி’ படத்தில் இடம்பெறும் பாடல் வரிகளே இந்த ‘காற்றின் மொழி’ என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஜீவா, ராஷி கண்ணா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில், பா...
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, 2013 ஆம் ஆண்டு வெளியாக இருந்த திரைப்படம் ‘மதகஜராஜா’...
உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மோர் 4 புரொடக்ஷன்ஸ் (More 4 Production) தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘கண்நீரா’...