திருமணமே ஆகாத ஆர்யாவுக்கு மச்சினிச்சியா! என்று ஆச்சரியப்பட வேண்டாம். கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘கலாபக்காதலன்’ படத்தில் ஆர்யாவின் மச்சினிச்சி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரட்டியவர் அக்சயா. அப்படத்தை தொடர்ந்து ‘உளியின் ஓசை’, ‘எங்கள் ஆசான்’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர், தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
‘யாளி’ என்ற படத்தை இயக்கி நடித்து வரும் அக்சயா, இப்படத்தில் நடன இயக்குநராக பணியாற்றிய காதல் கந்தாஸ், சில காரணங்களால் இப்படத்தில் இருந்து விலக, தற்போது நடன இயக்குநர் பணியையும் செய்து வருகிறார்.
தமன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் இரண்டாவது நாயகனாக புதுமுகம் அர்ஜூன் என்பவர் நடிக்க, இவர்களுடன் ஊர்வசி, மனோபாலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
எஸ்.ஆர்.ராம் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். ராமராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். எபி கிரியேஷன் சார்பாக டி.பாலச்சந்திரன் இப்படத்தை தயாரிக்கிறார்.
படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்படத்தின் இசையை மே மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதை தொடர்ந்து படத்தையும் விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஜீவா, ராஷி கண்ணா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில், பா...
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, 2013 ஆம் ஆண்டு வெளியாக இருந்த திரைப்படம் ‘மதகஜராஜா’...
உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மோர் 4 புரொடக்ஷன்ஸ் (More 4 Production) தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘கண்நீரா’...