ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் 'சந்தோஷத்தில் கலவரம் 'என்கிற இப்படத்தை திம்மா ரெட்டி வி.சி. தயாரிக்கிறார்.
இப்படத்தைக் கிராந்தி பிரசாத் இயக்குகிறார். இவர் பல விளம்பரப்படங்கள் , குறும்படங்களை இபக்கியவர். அவற்றுக்காக விருதுகளும் பெற்றவர் . திரைப்படக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற இவர் ,தெலுங்கில் சில இயக்குநர்களிடமும் திரைப்பாடம் பயின்றவர் . இருந்தாலும் படங்கள் பார்த்து கற்றவை அதிகம் . தமிழ்ப்படங்கள் நிறைய பார்த்து தமிழ் திரைச் சூழலை அறிந்து வைத்துள்ளார். இங்கே முகங்களை விட்டு விட்டு திறமைக்கு மட்டும் தரப்படும் மரியாதையை வைத்து தமிழில் படம் இயக்க வந்திருக்கிறார் '
"ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் கலவரம் நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்? என்பதே கதை. அதனால்தான் 'தீமைக்கும் நன்மைக்கும் இடையில் நடக்கும் மோதல் 'என்று டைட்டிலுடன் டேக் லைன் போட்டுள்ளோம் இது சஸ்பென்ஸ் த்ரில்லர் ரகப்படம் என்றாலும் இதில் நட்பு ,காதல் , அன்பு , காமெடி , ஆன்மிகம் எல்லாம் கலந்துள்ளன.
உன்னையே நீ அறிவாய் உனக்குள் இருக்கும் இறைவன் உணர்வாய் , உன் உயரம் அறிவாய் என உரக்கச் சொல்கிறது படம் "என்கிறார் இயக்குநர் கிராந்தி பிரசாத் .
நிரந்த் ,ருத்ரா அவ்ரா , ஆர்யன் , ஜெய் ஜெகநாத் , ராகுல் சி .கல்யாண் , கெளதமி , செளஜன்யா , ஷிவானி ,அபேக்ஷா என இப்படத்தில் புதுமுகங்கள் பலரும், ராவி மரியா வித்தியாசமான ரோலில் நடித்துள்ளனர்.
படத்துக்கு ஒளிப்பதிவு பவுலியஸ் இவர் ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர். இப்படத்துக்காக அமெரிக்காவிலிருந்து வந்து பணியாற்றியுள்ளார். இவருடன் ஷிரவன்குமார் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை சிவநக் , பாடல்கள் கபிலன் மணி அமுதன் , ப்ரியன் ,எடிட்டிங் கிராந்தி குமார். ஒலிப்பதிவு அருண் வர்மா இவர். ஆஸ்கார் புகழ் ரசூல் பூக்குட்டியின் மாணவர் .
படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஜீவா, ராஷி கண்ணா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில், பா...
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, 2013 ஆம் ஆண்டு வெளியாக இருந்த திரைப்படம் ‘மதகஜராஜா’...
உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மோர் 4 புரொடக்ஷன்ஸ் (More 4 Production) தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘கண்நீரா’...