நிருபர்கள் குறித்து அதுவும் குறிப்பாக பெண் நிருபர்கள் குறித்து மிக மோசமான கருத்துக்களை தெரிவித்த நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான எஸ்.வி.சேகருக்கு எதிராக பத்திரிகை மற்றும் ஊகத்துறையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பாகவும் எஸ்.வி.சேகருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என விளங்கப்படும் ஊடகம் இன்று மக்களை ஒன்றிணைக்கிறது.
அப்படிப்பட்ட ஊடகத்துறையில் இன்றைய சூழலில் தைரியமாகவும் , முற்போக்கு அணுகுமுறையோடும் பெண்கள் காணப்படுவது பெருமைக்குறியது, போற்றுதற்குரியது….ஆனால் திரு.S.Ve.சேகர் அவர்கள் தன்னுடைய முகநூல் பதிவில் ஊடகத்துறையில் பணிபுரியும் பெண்களை இழிவு படுத்தும் ஒரு செய்தியை பதியவிட்டுருக்கிறார்.
பொதுவாக முகநூலில் நமக்கு வரும் கருத்து பதிவினை, நமக்கு உடன்பட்டால் மட்டுமே நாம் அதை மற்றவருக்கு அனுப்புவோம் . அந்த வகையில் திரு. S.Ve.சேகர் . அவர்கள் தனக்கு வந்த பதிவின் கருத்துக்கு உடன்பட்டே மறுபதிவு செய்து இருக்கிறார். அதில் உள்ள கருத்து பதிவிற்க்கு அவர் தார்மீக பொறுப்பு ஏற்று கொள்ள வேண்டும்.
கலைத்துறையால் சமூகத்தில் அறியப்பட்ட இவர் பொறுப்பற்ற முறையில் பெண்களை இழிவாக பதிவு செய்துள்ளார். இதை தென்னிந்திய நடிகர் சங்கம் கடுமையாக கண்டிக்கிறது .
ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஜீவா, ராஷி கண்ணா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில், பா...
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, 2013 ஆம் ஆண்டு வெளியாக இருந்த திரைப்படம் ‘மதகஜராஜா’...
உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மோர் 4 புரொடக்ஷன்ஸ் (More 4 Production) தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘கண்நீரா’...