ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பாக வி.ராஜா தயாரித்திருக்கும் படம் ‘அருவா சண்ட’. ராஜா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக மாளவிகா மேனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், செளந்தரராஜா, கஞ்சா கருப்பு, காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை ஆதிராஜன் இயக்கியிருக்கிறார்.
இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் இப்படத்திற்காக வைரமுத்து ஜி.எஸ்.டி பாடல் ஒன்றை எழுதியுள்ளார். “இவ சித்தூரு சிறுக்கி செக்ஸான கிறுக்கி முத்தாடு மீசை முறுக்கி....இது சத்தான சரக்கு சர்வீசும் இருக்கு...ஜி.எஸ்.டி இல்ல உனக்கு...” என்ற பட்டையை கிளப்பும் இந்த பாடலை பல லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கில் படமாக்கியுள்ளனர். தீனா நடன அமைப்பில், ‘என் பேரு மீனாகுமாரி...” பாடல் புகழ் அனிதா இப்பாடலை பாட, மும்பை அழகி சுப்ரா கோஷி நடனம் ஆடியிருக்கிறார்.
சிட்டி மட்டும் அல்லாமல் தமிழகத்தின் மூளை முடுக்கெல்லாம் பட்டையை கிளப்பும் பாடலாக இப்பாடல் உருவாகியிருக்கிறது.
தரண் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் பாண்டி ஒளிப்பதிவு செய்ய, வி.கே.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்திருக்கிறார். சுரேஷ் கல்லேரி கலை அமைக்க, தளபதி தினேஷ் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
கபடி, கெளரவக் கொலை பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கும் ‘அருவா சண்ட’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி, மனசாட்சி உள்ளவர்களின் இதயங்களை உலுக்கு எடுக்கும் என்பது நிச்சயம், என்கிறார் இப்படத்தின் இயக்குநர் ஆதிராஜன்.
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...