சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி, அரசியல், சினிமா என்று அனைத்து துறைகள் குறித்தும் அவ்வபோது கமெண்ட் அடித்து வருவதோடு, தன்னை யாராவது கிண்டல் செய்தால், அதையும் ஜாலியாக எடுத்துக்கொண்டு அவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பார்.
ரசிகர்கள் தன்னை கிண்டல் செய்வது எல்லையை மீறும் பட்சத்தில் அவரும் பதிலுக்கு, திட்டி தீர்த்துவிடுவார், அதனால் கஸ்தூரியின் ட்விட்டர் பலோவேர்ஸின் எண்ணிக்கை அதிரித்து வருகிறது.
இந்த நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுடன் சேர்ந்து தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கஸ்தூரி, ”எத்தனை நாட்களுக்கு தான் பழைய போட்டோவையே வைத்து கலாய்ப்பீர்கள், இந்தாங்க புது அவல்” என்றும் பதிவிட்டுள்ளார்.
கஸ்தூரியின் இந்த பதிவுக்கு ஏற்றபடி நெட்டிசன்கள் அவரை கலாய்ப்பதோடு, ராஜு பாயுடன் எப்போ செல்பி எடுப்பீங்க, என்று கேட்க, அதற்கு அவர், அந்த நாளுக்காக தான் காத்திருக்கிறேன், என்று பதில அளித்துள்ளார்.
கஸ்தூரியின் இந்த பதிவும், புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
எவ்வளவு நாள்தான் பழைய ஃபோட்டோவை வச்சு troll பண்ணுவீங்க. இந்தாங்க புது அவல். 😋 pic.twitter.com/3vFIJN3X48
— kasturi shankar (@KasthuriShankar) April 22, 2018
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...