அல்லு அர்ஜூன், அணு இமானுவேல் நடிப்பில் உருவாகியுள்ள ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளிலும் வரும் மே 4 ஆம் தேதி ரிலீஸாகிறது.
கே.நாக பாபு வழங்கும் ராமலெட்சுமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீஷா ஸ்ரீதர் லகடபாடி தயாரித்திருக்கும் இப்படத்தை வி.வம்சி இயக்கியிருக்கிறார். ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு விஷால் - சேகர் இசையமைக்க, பா.விஜய், விஜய் பாலாஜி ஆகியோர் வசனம் எழுதியிருக்கிறார்கள். பாடல்கலை பா.விஜய் எழுதியிருக்கிறார். கோட்டகிரி வெங்கடேஷ்வர ராவ் படத்தொகுப்பு செய்துள்ளார்.
அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சரத்குமார் வில்லனாக நடித்திருக்கிறார். அர்ஜுன் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார். இவர்களுடன் நதியா, பொம்மன் இரானி, சாருஹாசன், சாய்குமார், பிரதீப் ராவத், போசானி கிருஷ்ண முரளி, ரவி காலே உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...