நடிகராவதற்கு முன்பாகவே தனது சமூக பணிகள் மூலம் மக்களிடம் இருந்து ‘பப்ளிக் ஸ்டார்’ என்ற பட்டத்தை பெற்ற துரை சுதாகர், ‘தப்பாட்டம்’ படத்தின் மூலம் ஹீரோவானவர், அடுத்தடுத்து நான்கு படங்களில் ஹீரோவாக நடித்து முடித்துவிட்டார். இருந்தாலும், ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்றில்லாமல், முன்னணி இயக்குநர்களின் இயக்கத்தில் நல்ல கதாபாத்திர வேடமாக இருந்தாலும் நடிக்க ரெடி என்று கூறியவருக்கு தற்போது பல முன்னணி இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால், அந்த படங்கள் குறித்து தயாரிப்பு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ செய்தியை வெளியிடாததால், அப்படங்கள் பற்றி எந்த தகவலையும் வெளியிடாமல் இருக்கும் துரை சுதாகர், இன்னும் சில மாதங்களில் தமிழ் சினிமாவின் முக்கியமான வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக உருவெடுப்பார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
இந்த நிலையில், மஹிந்திராவின் புதிய அறிமுகமான Xuv 5oo வாகனத்தை நடிகர் துரை சுதாகர் அறிமுகம் செய்து வைத்துள்ளார். ஸ்ரீ ஏ.ஆர்.என் மோட்டார் நிறுவனத்தில் நடைபெற்ற இந்த அறிமுக விழாவில் அவர் புதிய காரை அறிமுகம் செய்து வைத்து, முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார்.
சமீபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தொழிலதிபர் சேபஸ்டின், லட்சுமி பிரபா, வெங்கடேஷ், ராஜா உள்ளிட்டவர்களோடு, நிறுவனத்தின் இயக்குனர் பி.எழில் அரசன், பொதுமேலாளர் முத்துகுமார், துனை பொது மேலாளர் பாலமுருகன் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் கலந்துக்கொண்டனர்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...