விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஓவியா இருந்தவரை படு பரபரப்பாக நகர்ந்த இந்நிகழ்ச்சியில் இருந்து தற்போது ஓவியா வெளியேற்றப்பட்டுவிட்டார்.
இந்த நிலையில், நேற்று புதுவரவாக நடிகை சுஜா வாருணி பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கியுள்ள நிலையில், இன்று மற்றொரு புதுவரவாக நடிகர் ஹரிஸ் கல்யாண் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எண்ட்ரியாகியுள்ளார்.
அமலா பால் நடித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஹரிஸ் கல்யாண், ‘பொறியாளன்’, ‘வில் அம்பு’ போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...