தமிழ் சினிமாவில் அதிக மார்க்கெட் உள்ள நடிகர்களில் முக்கியமானவராக உருவெடுத்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. சிறப்பான ஓபனிங்கோடு தொடர்ந்து ஹிட் படம் கொடுக்கும் இவரது சம்பளம் ரூ.10 கோடிக்கும் மேல் என்று கூறப்படுகிறது. விஜய் சேதுபதியின் கால்ஷீட் கிடைத்தால் பத்து கோடி என்ன, அதைவிடவும் அதிகமாக கொடுக்கவும் சில தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தாலும், விஜய் சேதுபதி என்னவோ கோடிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பதாகவும், கதை பிடித்து விட்டால், சம்பள குறைப்பும் செய்துக்கொள்வதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, நடிகர்கள் வாங்கும் சம்பளத்தால் தான் தமிழ் சினிமாவில் எந்த திரைப்படமும் லாபத்தை ஈட்ட முடியவில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் ஞனானவேல்ராஜா கூட, தமிழ் சினிமாவில் நடிகர்கள் வாங்கும் சம்பளத்தினால் தான் இண்டஸ்ட்ரியே நஷ்ட்டமடைவதாகவும், இதே நிலை நீடித்தால் தான் தெலுங்கு சினிமாவுக்கு இடம்பெயர முடிவு செய்திருப்பதாகவும் கூறினார்.
இந்த நிலையில், சமீபத்தில் சம்பள குறைப்பு குறித்து விவாதிக்க நடிகர்கள் சங்கம் சார்பில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், படம் தொடங்கும் போது குறிப்பிட்ட சதவீதத்தை சம்பளமாக பெற்றுக்கொண்டு பிறகு படம் முடிந்த பிறகு மீதி சதவீத சம்பளத்தை நடிகர்கள் பெற்றுகொள்ளலாம், என்று யோசனை கூறப்பட்டதாம். இந்த யோசனைக்கு முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவித்தவர் நடிகர் விஜய் சேதுபதி தானாம்.
காரணம், இதுவரை அவர் நடித்த படங்களில் எதிலும் முழு சம்பள தொகையை அவர் பெற்றதில்லையாம். படம் தொடங்கும்போது பேசப்படும் சம்பள தொகையில் குறைந்தது 1 கோடி ரூபாயாவது பாக்கி வைத்து விடுவார்களாம். அவரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டு விடுகிறாராம். இப்படியே அவர் விட்டு விட்டு, இதுவரை ரூ.21 கோடி ரூபாய் அவருக்கு வர வேண்டி உள்ளதாம். எந்தவித அக்ரிமெண்டும் போடாத போதே, தனக்கு இவ்வளவு தொகை சம்பள பாக்கி வைக்கிறார்கள், இதையே அக்ரிமெண்ட் போட்டு செய்தால், சிலர் மொத்த சம்பளத்தையும் பாக்கி வைத்தாலும் வைப்பார்கள், என்று அந்த கூட்டத்தில் கூறி வருத்தப்பட்டாராம்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...