சினிமாத் துறையில் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருவதாக பல நடிகைகள் வருத்தப்பட்டு பேட்டி அளித்து வருகிறார்கள். தெலுங்கு சினிமா நடிகை ஸ்ரீரெட்டி பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகையும் மாடலுமான ஆகார்ஷி சர்மாவுக்கு, நடு ரோட்டில் ரசிகர்கள் பாலியல் தொல்லை கொடுத்திருக்கும் தகவல் சினிமாத் துறையினரை பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மும்பையில் வசிக்கும் ஆகாஷி சர்மா, இரு சக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். அப்போது இளைஞர்கள் இரண்டு பேர் நடிகையின் பின்னாடியே துரத்தி வந்திருக்கிறார்கள். திடீரென்று ஆகார்ஷி சர்மாவின் பாவாடையை பிடித்து இழுத்த அவர்கள் ஆபாசமாகவும் பேசியிருக்கிறார்கள்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆகார்ஷி, நிலை தடுமாறி வண்டியில் இருந்து கீழே விழுந்துள்ளார். அவருக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கூறிய ஆகார்ஷி சர்மா, ”நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தை யாரும் தட்டி கேட்கவில்லை. யாரும் உதவிக்கும் வரவில்லை. இது எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
அந்த மர்ம நபர்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருக்கும் ஆகார்ஷி சர்மா, அவர்கள் பிடிபடுவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை, என்றும் தெரிவித்துள்ளார்.
80-களின் முன்னணி கதாநாயகியாகவும், ரசிகர்களின் கனவு கண்ணியாகவும் வலம் வந்த நடிகை அம்பிகா, தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நிலையில், அவரது முகத்தோற்றம் கொண்ட ஒரு நடிகையை கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு ஒன்று முயற்சித்து வருகிறது...
இளம் வயது உலக செஸ் சாம்பியனான குகேஷ், நேற்று நடிகர் சிவகார்த்திகேயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்...
’வேற மாரி ஆபிஸ்’, ‘வேற மாறி லைவ் ஸ்டோரி’ தொடர்கள் மற்றும் ‘மால்’, தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்த விஜே பப்பு, ‘ராகவன் : Instinct’ என்ற இணையத் தொடர் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்...