‘அ.அ.அ’ படத்தின் மூலம் சிம்பு என்ற நடிகரையே தமிழ மக்கள் மறந்திருக்க கூடம். இருந்தாலும், ட்விட்டர் மூலம் அவ்வபோது தான் இருப்பதை சிம்பு மக்களுக்கு நினைவுப்படுத்தி வருகிறார்.
இதற்கிடையே தனது ‘காதல் தேவதை’ யை செப்டம்பர் 1 ஆம் தேதி சிம்பு அறிமுகப்படுத்த உள்ளார். ஆம், சந்தானம் நடித்து வரும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்திற்கு சிம்பு இசையமைத்து வருகிறார். இப்படத்தில் இடம்பெறும் ”காதல் தேவதை...” என்ற ஒரு பாடலை செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார்.
மேலும், இப்படத்தில் உள்ள மற்ற பாடல்களை இசையமைப்பாளர் அனிருத், டி.ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் ஆகியோர் பாடியிருக்கிறார்களாம்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...