பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களின் பெரும் ஆதரவோடு வெற்றி பெற்றது. தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்நிகழ்ச்சியின் பின்னணியில் நடந்த சோகமான சம்பவம் ஒன்று குறித்த தகவலை நடிகை சுஜா வாருணி வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் குழுவிற்காக பிரைட் ஆப் தி சேனல் என்ற விருதை அந்த சேனல் சமீபத்தில் வழங்கியது. ஆனால், சுஜா, சினேகன், ஓவியா, ரைஸா, ஜூலி, காயத்திரி, சக்தி, கஞ்சா கருப்பு ஆகியோர் இதில் கலந்துக்கொள்ளவில்லை.
அதேபோல், பிக் பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை அந்த சேனல் நடத்தியது. இதற்கு பிக் பாஸ் போட்டியாளர்கல் அனைவருக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டது. அதில் ஒருவரான சுஜா, இதில் கலந்துக்கொள்ளவில்லை. இது குறித்து விசாரித்ததில், சேனல் மீது சுஜா செம கடுப்பில் இருப்பதாக கூறப்பட்டது.
அவரது கடுப்புக்கான காரணம் என்னவெனில், பிக் பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை நடத்தில் அனைவருக்கும் விருது இருக்கிறது, என கூறி அழைப்பு விடுத்தவர்கள், சுஜாவுக்கும், கணேஷுக்கும் சேர்த்து ஒரு விருது வழங்கியுள்ளார்கள். அந்த விருதை கணேஷ், சுஜாவுக்கே கொடுத்துவிட, அதை எடுத்துக்கொண்டு மேடையை விட்டு அவர் இறங்கியவுடன், பெண் ஊழியர் ஒருவர் சுஜாவிடம், மேடம் அந்த விருதை கொடுக்க, இதை வேறு ஒருவருக்குவழங்க வேண்டும், என்று கூறிவிட்டாராம்.
இந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியான சுஜா, இவ்வளவு பெரிய சேனலுக்கு ஒரு விருது வாங்க முடியாதா?தனித்தனியா விருது கொடுத்தா தான் என்ன? இது அசிங்கமா தெரியலையா? எப்படி தான் இப்படி பண்றாங்களோ.. பிக்பாஸ் நிகழ்ச்சி எங்கள் எல்லோருக்கும் புகழை கொடுத்திருக்கிறது. ஆனால், யாருக்கும் வெற்றியை கொடுக்கவில்லை, என்று கோபத்தோடு பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
80-களின் முன்னணி கதாநாயகியாகவும், ரசிகர்களின் கனவு கண்ணியாகவும் வலம் வந்த நடிகை அம்பிகா, தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நிலையில், அவரது முகத்தோற்றம் கொண்ட ஒரு நடிகையை கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு ஒன்று முயற்சித்து வருகிறது...
இளம் வயது உலக செஸ் சாம்பியனான குகேஷ், நேற்று நடிகர் சிவகார்த்திகேயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்...
’வேற மாரி ஆபிஸ்’, ‘வேற மாறி லைவ் ஸ்டோரி’ தொடர்கள் மற்றும் ‘மால்’, தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்த விஜே பப்பு, ‘ராகவன் : Instinct’ என்ற இணையத் தொடர் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்...