ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாக இருந்த ரஜினிகாந்தின் ‘காலா’ திரைப்பட வேலை நிறுத்தப் போராட்டத்தினாலும், தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய கட்டுப்பாட்டினாலும், ஜூன் 7 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘காலா’ படத்தின் அனைத்து மொழி சேட்டிலைட் உரிமையையும் ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் சேனல்களை கொண்டுள்ள ஸ்டார் நெட்வொர்க் இந்த மொழிகள் மட்டும் இன்றி, மலையாள டப்பிங்கையும் கைப்பற்றியுள்ளது.
நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கும் இப்படத்தை, ரஜினியை வைத்து ‘கபாலி’ என்ற மெகா ஹிட் கொடுத்த ரஞ்சித் இயக்கியிருக்கிறார்.
இதில் பாலிவுட் நடிகர் நானா படேகர், சமுத்திரக்கனி, ஷாயஜி ஷிண்டே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...