‘தனி ஒருவன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் பிஸியான நடிகராகியுள்ள அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. இதில் அவருக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருக்கிறார். சித்திக் இயக்கியிருக்கும் இப்படம் வரும் மே 11 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படத்திற்கு வசனம் எழுதி நடித்திருக்கும் ரமேஷ் கண்ணா, நடிகர் சித்ரா லட்சுமணன், தயாரிப்பாளர் முருகன் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சித்ரா லட்சுமணன், ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் வெளியாக காரணமாக இருந்த பரதன் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் விஸ்வநாதன் மற்றும் நடிகர் அரவிந்த்சாமி இருவருக்கும் நன்றி தெரிவித்தார். இப்படத்திற்காக அரவிந்த்சாமி, அரவிந்த்சாமி பெரும் ஒத்துழைப்பு கொடுத்ததோடு, முன் பணமே வாங்காமல் நடித்தும் கொடுத்ததாக, அவர் தெரிவித்தார். தயாரிப்பாளர் முருகன் பேசும் போதும் இதையே குறிப்பிட்டு, அரவிந்த்சாமிக்கு நன்றி தெரிவித்தார்.
நடிகர் அரவிந்த்சாமி பேசுகையில், ”படம் அனைத்து தடைகளையும் தாண்டி தான் வந்திருக்கிறது. இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் முருகனுக்கு நன்றி. மற்றவர்கள் சொல்வது போல பெரிதாக நான் எதையும் செய்யவில்லை. என்னால் தயாரிப்பாளருக்கு எந்த வகையில் உதவ முடியுமோ அதை தான் செய்திருக்கிறேன். இந்த படம் மட்டும் அல்ல, நான் நடிக்கும் அனைத்துப் படங்களிலும் இதை தான் நான் செய்து வருகிறேன்.
‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ எண்டர்டெயின்மெண்ட் படமாக இருக்கும். ஆக்ஷன், காமெடி என்று அனைத்துமே பெரிய அளவில் இருக்கும். மொத்தத்தில் இந்த படம் அனைத்து ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் படமாக இருக்கும்.” என்றவரிடம், தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஹீரோவாக நடிக்க தொடங்கிய நீங்க, மறுபடியும் வில்லன், மல்டி ஸ்டார் படங்களில் நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு, “நிச்சயமாக நடிப்பேன். கேரக்டர் இண்டர்ஸ்டிங்கா இருந்தா நடிப்பேன். இப்போ கூட மணி சாரின் ‘சிக்கசிவந்த வானம்’ படத்தில் பல ஹீரோக்கள் நடிக்கிறார்கள், அதில் நடிக்கிறேன். அனைத்து ஜானரிலும் நான் நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் ஆவி, பேய் போன்ற ஜானரில் மட்டும் நடிக்க மாட்டேன். காரணம், அதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. சயின்ஸ் பிக்ஷன் திரில்லர் படம் என்றால் ஓகே, ஆனால் பேய் படங்கள் எனக்கு பிடிக்காது.” என்றார்.
டிவிட்டரில் நீங்கள் போடும் பதிவுகள் ஆக்ரோஷமாக இருக்கிறதே, அரசியல் ஆர்வம் இருக்கா? என்றதற்கு, “அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. நான் எப்போதும் அமைதியானவன் தான். சில விஷயங்கள் நடக்கும் போது சாதாரண மனிதனாக தான் எனது கருத்தை பகிர்ந்துகொள்கிறேன். யாரிடமாவது நமது என்னத்தை வெளிப்படுத்த வேண்டும் அல்லவா, அதனால தான் ட்விட்டரில் அப்படி பதிவிடுகிறேன்.
சினிமா வேலை நிறுத்தம் குறித்து நான் பதிவிட்டதும் அப்படிதான். எல்லோருடைய ஆதரவோடு தான் வேலை நிறுத்தம் நடந்தது. ஆனால், அது அதிக நாட்கள் நடந்ததால், அதை சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்று நான் எண்ணினேன். ஏன் என்றால், சினிமாவில் தின கூலி பெறும் ஊழியர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு பிரச்சினை வரக்கூடாது என்பதால் தான் அப்படி பதிவிட்டேன். மற்றபடி எனக்கு அரசியல் ஆர்வம் எல்லாம் இல்லை. ஆனால், சாதாரண மனிதனாக அனைத்துக்கும் எனது கருத்தை தெரிவிப்பேன்.” என்றார்.
நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோருடன் ,மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்திருக்கும் இப்படத்தை ஹர்ஷினி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, பரதன் பிலிம்ஸ் நிறுவனம் வரும் மே 11 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...
‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘முரா’...
பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா...