அஜித்தின் ‘விவேகம்’ டிரைலர் இன்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதோடு, திரையுலகினரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அந்த அளவு மிக பிரம்மாண்டமாக டிரைலர் உருவாகியிருக்கிறது.திரையுலகினர் பலர் விவேகம் டிரைலர் வேற லெவல் என்று பாராட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், காமெடி நடிகை குண்டு ஆர்த்தி, விவேகம் டிரைலர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ”57 முறை பார்த்தேன்...விஷுவல்ஸ் வேற வெவல்..படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். ஆஸ்கர் விருது பெற தயாராகுங்கள்...பெருமைப்படும் ரசிகை” என்று பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த பதிவை கிண்டலிடிக்கும் வகையில், “இந்த ட்ரெய்லருக்கே கண்டிப்பா ஆஸ்கர் தருவாங்க மேடம்... கவலைப்படாதீங்க..” ஒருவர் கமெண்ட் பண்ணியிருந்தார்.
அவருக்கு பதில் அளித்த ஆர்த்தி, ”தம்பி ஓரமா போய் விளையாடு பா...நாங்க யார்னு முடிவு பண்றது எங்க முன்னாடி இருக்குறவங்க தான்..இன்னும் நீங்க வளரணும்” என்றார். அதற்கு அவர், “பொய் சொல்லாதீங்க..ரொம்ப போர்” என்று பதில் கமெண்ட் போட, அதற்கு ஆர்த்தியோ, “என்ன பயமா இருக்கா?? மெர்சலா இருக்கா??? கஷ்டம் தான்” என்று விஜயை கலாய்க்கும் விதத்தில் பதில் அளித்துள்ளார்.
ஆர்த்தியின் இந்த ட்வீட்டால் தற்போது விஜய் ரசிகர்கள் செம கடுப்பாகியுள்ளார்கள்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...