Latest News :

”சொந்த கையில் சொர்க்கம் காணுங்கள்” - கெளதம் கார்த்திக்கின் படம் சொல்லும் மெசஜ்!
Saturday April-28 2018

’ஹர ஹர மஹாதேவகி’ என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சந்தோஷ் பி.ஜெயக்குமார், தாது இரண்டாவது படத்தையும் அடல்ட் காமெடி படமாகவே இயக்கியிருந்தாலும், இதை பேய் படமாகவும் இயக்கியிருக்கிறார். அவரது முதல் படத்தில் நடித்த கெளதம் கார்த்திக் தான் இதிலும் ஹீரோ. ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற தலைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில் யாஷிகா ஆனந்த், வைபவி ஷாண்டியா, சந்திரிகா ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.

 

ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் மே 4 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படக்குழுவினர் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். 

 

இதில் பேசிய இயக்குநர் சந்ந்தோஷ் பி.ஜெயக்குமார், “நான் இயக்கும் இரண்டாவது படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. அடல்ட் ஹாரர் காமெடி படம். இவர் ஏன் இது போன்ற படங்களை எடுக்கிறார்?, கருத்து சொல்லும் படங்களை எடுக்காமல் ஏன் இப்படியான படங்களை எடுத்து திரைத்துறையை சீரழிக்கிறீர்கள் என உங்களுக்குள் ஏராளமான கேள்விகள் இருக்கும். ஆனால் இது ஒரு ஜேனர். உலக சினிமாவில் எல்லா இடத்திலும் இருக்கிறது. தமிழில் இல்லை. இந்த படத்தை ஒரு பொழுதுபோக்கு படமாக பார்த்தால் பொழுது போக்கு படமாக மட்டுமே தெரியும். அப்படித்தான் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நான் பணியாற்றும் இரண்டாவது படம். இந்த படத்திற்காக நான் என்ன கதை அவரிடம் சொன்னேன் என்று எனக்கு தெரியவில்லை. அவர் என்ன கதை கேட்டார் என்று எனக்கு தெரியவில்லை. படபிடிப்பு தளத்திற்கு சென்று தான் கதையை விவாதித்து காட்சிகளையும், வசனங்களையும் எழுதினோம். இந்த படத்தில் வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி என மூன்று நாயகிகள் இருக்கிறார்கள். இதில் நடிகை சந்திரிகா ரவி பேயாக நடித்திருக்கிறார். அவர் படபிடிப்பின் போது இருபதடி உயரத்தில் கயிறு கட்டி தொங்கியப்படி நடித்துக் கொடுத்தார். அவருக்கு மேக்கப் போட ஒன்றரை மணி நேரம் ஆகும். இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தார். தயாரிப்பாளர் என்னிடம் கதை கேட்கவில்லை. நான் சொன்ன பட்ஜெட்டிற்கு ஒப்புக்கொண்டு, எந்த வித தலையீடும் இல்லாமல், முழு சுதந்திரம் கொடுத்தார். அதனால் தான் இருபத்தி மூன்று நாட்களுள் படபிடிப்பை நடத்தி முடித்தோம்.’ என்றார்.

 

நடிகர் கௌதம் கார்த்திக் பேசுகையில், “இந்த படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொல்லவில்லை. இருந்தாலும் படபிடிப்பு தளத்திற்கு வந்து குழு விவாதம் நடத்தி காட்சிகளை படமாக்கினார். இந்த படத்தில் என்னுடன் ஒரு பாடலுக்கு நடிகர் ஆர்யா நடனமாடியிருக்கிறார். இதற்காக அவருக்கு நான் நன்றி சொல்கிறேன். எனக்கு அவருடன் இணைந்து நடனமாட ஆசையிருந்தது. அந்த ஆசை இந்த படத்தில் நிறைவேறியிருக்கிறது. இந்த படம் ஃபுல் அண்ட் ஃபுல் ஃபன் அண்ட் எண்டர்டெயின்மெண்ட் தான். இதில் மெசேஜ் எதுவும் இல்லை. அதை எதிர்பார்க்காதீர்கள். என்னுடன் நடித்த மூன்று நடிகைகளுக்கும் நன்றி சொல்கிறேன். ஏனெனில் அடல்ட் ஹாரர் காமெடி படம் என்று தெரிந்தும் நடிக்க ஒப்புக்கொண்ட அவர்களின் துணிச்சலை பாராட்டுகிறேன்.” என்றார்.

 

நடிகர் சாரா பேசுகையில், “இயக்குநர் என்னை போனில் தொடர்பு கொண்டு கௌதம் கார்த்திக்கிற்கு நீதான் நண்பனாக நடிக்கிறாய். உடனே புறப்பட்டு வா என்றார். படபிடிப்பில் நான் ஏராளமாக சொதப்பினேன். இருந்தாலும் என்னை பொறுத்துக் கொண்டு நடிக்க வைத்தார். இந்த படத்தை குடும்பத்துடன் பார்க்க முடியாது. நானே இந்த படத்தை தனியாக பார்ப்பேன். என் மனைவி தனியாக பார்ப்பார். இயக்குநரிடம் ஹீரோவிற்கு கிளாமரான சீன்கள் வைக்கிறீர்கள் பரவாயில்லை. எனக்கு ஏன் கிளாமரான காட்சிகள் வைக்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு இது வரை பதிலில்லை. ஆனால் இந்த படத்தைக் காண தியேட்டருக்குள் வந்துவிட்டால் ஜாலியாக இரண்டு மணி நேரம் பொழுது போகும்.” என்றார்.

 

நடிகை யாஷிகா ஆனந்த் பேசுகையில், “இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கௌதம் கார்த்திக், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் என அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றிய போது என்னுடைய கனவு நனவானது போல் இருந்தது. அத்துடன் இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட காட்சியில் நடித்தது புது அனுபவமாக இருந்தது. இது போன்ற படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவளித்தால் சினிமா அடுத்த கட்டத்திற்கு முன்னேறும்.” என்றார்.

 

இதுபோன்ற படங்களில் நடிப்பது குறித்து உங்க அப்பா எதுவும் சொல்லவில்லையா? என்று கெளதமிடம் கேட்டதற்கு, “இந்த படம் எப்போ ரிலீஸாகும் என்று அப்பா என்னை கேட்டுக்கொண்டே இருக்கிறார். என்னை விட அவர் தான் இந்த படத்தின் மீது ரொம்ப ஆவலுடன் இருக்கிறார்.” என்றார்.

 

ஏற்கனவே சமூகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற படங்களினால் அது பெருகாதா? என்று இயக்குநரிடம் கேட்டதற்கு, “இந்த படத்தை பார்த்து யாரும் அதுபோன்ற நிலைக்கு போக மாட்டார்கள். ஏன் என்றால், “சொந்த கையில் சொர்க்கம் காணுங்கள்” என்ற மெசஜை இதில் சொல்லியிருக்கும். அதை செய்துவிட்டால் நட்டில் எந்த பாலியல் குற்றங்களும் நடக்காது.” என்று கூறியவர், ”நான் தொடர்ந்து இதுபோன்ற படங்களை தான் எடுப்பேன் என்று இல்லை, எனது அடுத்த படம் யு சான்றிதழ் பெற்ற படம். அதேபோல், பல ஜானரில் படம் எடுக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். இந்த அடல்டு காமெடி என்பது தமிழ் சினிமாவில் இல்லாத ஜானர் என்பதால் இதை எடுத்தேன். இதன் பிறகு வேறு ஜானரில் படம் எடுப்பேன்.” என்றும் கூறினார்.

Related News

2492

சினிமாவில் பாதிப்பு இல்லாமல் எதுவும் இல்லை - ‘ட்ராமா’ இசை வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் பேச்சு
Thursday March-13 2025

அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...

நன்றி தெரிவித்து வெற்றியை கொண்டாடிய ‘எமகாதகி’ படக்குழு!
Thursday March-13 2025

ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

ரசிகர்களை அச்சத்தில் உரைய வைக்கும் ‘மர்மர்’ படத்தின் திரைகள் அதிகரிப்பு!
Wednesday March-12 2025

தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...

Recent Gallery