மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் படம் ‘நடிகையர் திலகம்’. இதில் சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க, துல்கர் சல்மான், சமந்தா, விஜய் கொண்டரங்கா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருக்கிறார்.
வரும் மே 9 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகை கீர்த்தி சுரேஷ், இப்படத்திற்காக தான் பட்ட கஷ்ட்டங்களை பகிர்ந்துக்கொண்டார்.
பல்வேறு ஆராய்ச்சிகளுடன் படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஒவ்வொரு நாளும் சுமார் 4 மணி நேரம் மேக்கப் போடப்பட்டதாம். அதுமட்டும் இன்றி, அவரது உடல் எடையை அதிகரித்துக் காட்டுவதற்காகவும் பல்வேறு மேக்கப்படுகள் போடப்பட்டதாம்.
இது குறித்து பேசிய கீர்த்தி சுரேஷ், “கீ‘நடிகையர் திலகம்’ திரைப்படம் உருவாக காரணம் இயக்குனர் நாகி மற்றும் தயாரிப்பாளர் ஸ்வப்னா. இப்படத்தின் கதையை கேட்டு உடனே நடிக்க சம்மதம் தெரிவிக்க வில்லை. நிறைய கேள்விகள், சந்தேகங்கள் எழுந்தது. நிறைய நல்ல படங்களில் தற்போதுதான் நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்நிலையில், சிறந்த நடிகையின் வாழ்க்கை எப்படி நடிப்பது, நிறைய பேருக்கு அவர்களுடைய வாழ்க்கை வரலாறு தெரியும். எப்படி நம்மால் நடிக்க முடியும் என்று நினைத்தேன். இயக்குனர்தான் எனக்கு நம்பிக்கை கொடுத்து நடிக்க வைத்தார்.
‘தொடரி’ படத்தை பார்த்துதான் இயக்குனர் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். ‘தொடரி’ படம் எனக்கு ஏதாவது நல்லது பண்ணும் என்று நடிக்கும் போது நினைத்தேன். ஆனால், அப்படம் வெளியானப் பிறகு சில பேர் வாழ்த்தினார்கள், பல பேர் குறை சொன்னார்கள். ஆனால், அந்தப் படம் தான் எனக்கு தற்போது ‘நடிகையர் திலகம்’ என்ற படத்திற்கு பெரிய காரணமாக அமைந்திருக்கிறது.
இப்படத்தின் இயக்குனர் எனக்கு 3 மணிநேரம் கதை சொன்னார். இதுவரைக்கும் எந்த படத்தின் கதையும் 3 மணி நேரம் கேட்டதில்லை. அவ்வளவு சிறப்பாக இருந்து அவர் கதை சொல்லும்போது. படக்குழுவினர் அனைவரும் சிறந்த உழைப்பை கொடுத்திருக்கிறார்கள்.” என்றார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி விரைவில் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட இருக்கிறது. அதை தொடர்ந்து மே 9 ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...