வில்லன், நகைச்சுவை, குணச்சித்திரம் என்று அனைத்து வேடத்திற்கும் பொருந்துப் போகும் நடிகர்களில், தற்போது மிக முக்கிய நபராக வளர்ந்து வருபவர் மைம் கோபி. ‘மெட்ராஸ்’, ‘மாரி’, ‘பைரவா’, ‘கபாலி’, ‘கதகளி’, ‘மதுரை வீரன்’ என முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வருபவர், தற்போது 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார்.
இந்த நிலையில், ஒரு படத்தில் குறுப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிக்க முடியாமல் போனதை எண்ணி மைம் கோபி மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாராம்.
அது குறித்து மைம் கோபியிடம் கேட்டதற்கு, “வளர்ந்து வரும் நடிகனான எனக்கு எனது வாழ்க்கையில் இழந்த மிகப்பெரிய இழப்பாக நினைப்பது ‘செயல்’ என்ற படத்தில் நடிக்க முடியாமல் போனது தான். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள தண்டபாணி என்ற கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக என்னிடம் பேசினார்கள். அருமையான வேடம் அது. ஆனால், அவர்கல் சொன்ன தேதியில் நான் வேறொரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அதனால், நடிக்க முடியாமல் போனது, அதற்காக அவர்களிடம் வருத்தம் தெரிவித்தேன்.
படம் ரெடியாகி ரிலீசுக்கு தயாராக உள்ளதை தெரிந்துக்கொண்டு நான் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்று தயாரிப்பாளரிடமும், இயக்குநரிடமும் கேட்டேன். படத்தையும் பார்த்தேன். நான் தவற விட்ட அந்த தண்டபாணி கதாபாத்திரம் மிக மிக அருமையான கதாபாத்திரம். நான் நடிக்க முடியாமல் போன அந்த கேரக்டரில் சந்திரன் என்பவர் நடித்திருந்தார். அவரும் சிறப்பாக நடித்திருந்தார் என்றாலும், நான் தவறவிட்ட மிகப்பெரிய வாய்ப்பு இது.
எல்லா படத்திலும் ஹீரோவுக்குதான் அறிமுகம் பில்டப்பாக இருக்கும். ஆனால், இந்த படத்தில் மாறுபட்டு வில்லனுக்குதான் பில்டப் அதிகமாக இருந்தது. அதனால் இனி எந்த வாய்ப்பும் என் கை நழுவி போகாமல் கவனமாக பார்த்துக் கொள்வேன்.” என்றார்.
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...