Latest News :

மன்சூரலிகானுக்கு அம்மாவான கே.ஆர்.விஜயா!
Saturday April-28 2018

ராஜ்கென்னடி பிலிம்ஸ் நிறுவனம் மூலம் நடிகர் மன்சூரலிகான், தயாரித்து எழுதி இயக்கும் படம் ’கடமான்பாறை’. இப்படத்தின் மூலம் மன்சூரலிகானின் மகன் அலிகான் துக்ளக் ஹீரோவாக அறிமுகமாக, சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்று வாழும் மனிதனாக வித்தியாசமான வேடத்தில் மன்சூரலிகான் நடிக்கிறார்.

 

இதில் ஹீரோயினாக அனுராகவி நடிக்க, மற்றொரு நாயகியாக ஜெனி பெர்னாண்டஸ் நடிக்கிறார். இவர்களுடன் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவானன், முல்லை, கோதண்டம், பழனி, கனல் கண்ணன், போண்டா மணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளு சபா மனோகர், வென்கல் ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல் சுரேஷ் ஆகியோர் நடிக்க, மன்சூரலிகானுக்கு ஜோடியாக ருக்‌ஷா என்ற மலையாளப் பெண் மிரட்டலான வேடத்தில் நடிக்கிறார்.

 

இந்த நிலையில், இப்படத்தில் புதிதாக இணைந்திருக்கிறார் பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா. இவர் மன்சூரலிகானுக்கு அம்மாவாக இப்படத்தில் நடிக்கிறார். 

 

இது குறித்து கூறிய மன்சூரலிகான், “இந்த படத்தில் ஒரு கண்ணியமான அம்மா வேடம் ஒன்று இருந்தது. அந்த வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்த போது, கே.ஆர்.விஜயா நினைவுக்கு வந்தார். ஏற்கனவே நான் தயாரித்த ‘வாழ்க ஜனநாயகம்’ படத்தின் போது நான் வளர்ந்து வரும் நடிகன், நான் கேட்ட உடனே கே.ஆர்.விஜயா எனக்கு நடித்துக் கொடுத்தார். இப்போதும் ‘கடமான்பாறை’ படத்திலும் திருப்புமுனை கதாபாத்திரத்தில் கண்ணியமான எளிமையான அம்மாவாக நடித்துக் கொடுத்தார். பெரிய நடிகை என்ற எந்த ஒரு கர்வமும் இல்லாமல் அப்போது போல இப்போதும் இருக்கிறார்.” என்றார்.

 

விறுவிறுப்பான படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது.

Related News

2496

நன்றி தெரிவித்து வெற்றியை கொண்டாடிய ‘எமகாதகி’ படக்குழு!
Thursday March-13 2025

ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

ரசிகர்களை அச்சத்தில் உரைய வைக்கும் ‘மர்மர்’ படத்தின் திரைகள் அதிகரிப்பு!
Wednesday March-12 2025

தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...

‘வருணன்’ அனைவருக்கும் நெருக்கமான கதை - பிரபலங்கள் பாராட்டு
Tuesday March-11 2025

இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்‌ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...

Recent Gallery