சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘சென்னையில் ஒரு நாள்-2’ படத்தை கல்பதரு பிக்சர்ஸ் தயாரிக்க, அறிமுக இயக்குநர் ஜெ.பி.ஆர் இயக்குகிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் சரத்குமாருடன் மீண்டும் நெப்போலியன் இணைந்து நடிக்கிறார். மேலும், முனிஷ்காந்த், சுஹாசினி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
‘துருவங்கள் 16’ படத்திற்கு இசையமைத்த ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்தில் இடம்பெற்றுள்ள “நரம்புகள் புடைக்குதே...” என்ற ஒரு பாடல் நாளை (ஆக.18) வெளியாகிறது. இந்த பாடலை இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்ச் மற்றும் சரத்குமார் இணைந்து பாடியுள்ளனர்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...