ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தினை ‘தளபதி 62’ என்று அழைக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் ராதாரவி, எழுத்தாளர் பழ.கருப்பையா ஆகியோர் வில்லன்களாக நடிப்பதோடு நடிகை வரலட்சுமியும் வில்லியாக நடிக்கிறார்.
அரசியல் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மோட்டர் சைக்கிளில் பயணிக்க, முன்னணியில் விஜய் பயணிப்பது போல நேற்று இரவு சென்னையில் படமாக்கபப்ட்டது. அந்த காட்சிகளை ரசிகர்கள் செல்போனில் படம் பிடித்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி இருப்பதோடு, டிரெண்டிகாவும் ஆகியுள்ளது.
Here is the clear Video of Yesterday's #Thalapathy62 Shooting 😎 #Thalapathy #Vijay pic.twitter.com/VvrrMPrmm1
— CinemaInbox (@CinemaInbox) April 28, 2018
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...