‘தரமணி’ படத்திற்குப் பிறகு தன்னை தேடி எந்த திரைப்பட வாய்ப்பும் வரவில்லை, என்று வருத்தப்பட்ட நடிகை ஆண்ட்ரியா தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். அதாவது, பாடகி, நடிகை என்று இருந்த அவர் இனி வைல்ட் லைப் போட்டோகிராபராக மாறியிருக்கிறார். ஆம், ‘கா’ என்ற படத்திற்காக ஆண்ட்ரியா வைல்ட் லைப் போட்டோகிராபராகியுள்ளார்.
பரத், நமீதா, இனியா ஆகியோரது நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘பொட்டு’ படத்தை தயாரித்திருக்கும் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்க இருக்கும் புதிய படம் ‘கா’. முழுக்க முழுக்க ஹீரோயினை முன்னிலைப் படுத்தும் இப்படத்தில் ஆண்ட்ரியா ஹீரோயினாக நடிக்கிறார்.
கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார்.
கா என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளதால் ’கா’என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
முக்கிய கதாபாத்திரத்தில் இளவரசு மற்றும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சலீம் கவுஸ் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அறிவழகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அம்ரிஷ் இசைய்மைக்க, கோபி கிருஷ்ணா எடிட்டிங் செய்கிறார். லால்குடி இளையராஜா கலையை நிர்மாணிக்க, சங்கர் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார். ரவிகாந்த் இணை தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாஞ்சில் இயக்குகிறார்.
24 மணி நேரத்தில் நடக்கும் க்ரைம் த்ரில்லர் படமான இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான், மூணார், மேற்கு தொடர்ச்சி மலைகள் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.
இப்படத்தின் துவக்க விழா இன்று செனனியில் பூஜையுடன் நடைபெற்றது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...