டாஸ்மாக் மதுபானக் கடையை நடத்தி தமிழ் பெண்களை விதைவகளாக்கும் தமிழக அரசு, அப்படியே விபச்சார தொழிலையும் நடத்த வேண்டும், என்று இயக்குநர் வா.கெளதம் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒயிட் ஹார்ஸ் சினிமாஸ் மற்றும் யுரேகா சினிமா ஸ்கூல் ஆகிய நிறுவனங்கள் தயாரித்திருக்கும் படம் ‘காட்டுபய சார் இந்த காளி’. ‘மதுரை சம்பவம்’, ‘தொப்பி’, ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ ஆகியப் படங்களை இயக்கிய யுரேகா இயக்கியிருக்கும் இப்படத்தில் ஜெய்வந்த் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக ஜரா நடித்திருக்கிறார். இவர்களோடு ஆடுகளம் நரேன், மூணாறு ரமேஷ், மாரிமுத்து, சி.வி.குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விஜய் ஷங்கர் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் யுரேகா, “இந்தியில் இருக்கும் தேசிய கீதத்தை தமிழி மொழி பெயர்க்க வேண்டும் என்ற கோரிக்கையோடு, தமிழகத்தில் பணிபுரியும் வட நாட்டு மக்களுக்கு உள்நாட்டு விசா வழங்கப்பட வேண்உம்” என்ற கோரிக்கையையும் முன் வைத்தவர்.
அவரை தொடர்ந்து பேசிய இயக்குநர் கா.கெளதமன், “நான் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன். அதனால் தான் விவசாயிகளுக்காக தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறேன். இந்த படத்தின் ஹீரோ ஜெய்வந்த் அவரை ஹீரோவாக வைத்து என்னை படம் இயக்குமாறு கூறி வந்தார். அப்போது ஒருவரை அறிமுகப்படுத்தி இவர் தான் தயாரிக்க போகிறார், என்று கூறி மார்வாடி ஒருவரை காட்டினார். ஒரு மார்வாடிக்காக நாம் படம் இயக்க வேண்டுமா, என்று எண்ணி அதை நான் மறுத்துவிட்டேன். காரணம், நாம் அனைத்தையும் இழந்து வரும் நிலையில், சினிமாவையும் வேறு ஒருவர்களிடம் இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நமது விவசாயிகள் செத்து மடிந்துக்கொண்டிருக்கும் போது, அவர்களுக்காக மேல் தட்டு வர்க்கம் குரல் கொடுக்கவில்லை. அதனால் தான் கத்திபாரா மேம்பாலத்திற்கு பூட்டு போட்டேன். தற்போது தமிழகத்தினுள் துணை ராணுவம் வந்திருக்கிறது. என்ன தான் ராணுவம் வந்தாலும், நமது போராட்டம் தொடர்ந்துக்கொடே தான் இருக்கும்.
சிவப்பு எனக்கு பிடிக்கும் என்ற படத்தை இயக்கிய யுரேகா, அதில் தமிழகத்தில் சிவப்பு விளக்கு பகுதி வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறார். அதனால், பாலியல் குற்றங்கள் குறையும் என்றும் கூறியிருக்கிறார். நானும் அதை முன் மொழிகிறேன். எதற்காக என்றால், டாஸ்மாக் மதுக்கடைகளை நடத்தி தமிழக பெண்களை விதவைகளாக்கும் தமிழக அரசு, அப்படியே இந்த விபச்சார தொழிலையும் நடத்த வேண்டும், என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்தார்.
இறுதியாக பேசிய இயக்குநர் பாரதிராஜா, “தமிழகம் ரொம்ப மோசமான நிலைக்கு சென்றுக் கொண்டிருக்கிறது. ஒரு நடிகனை நாம் தான் உருவாக்குகிறோம். இப்படி நில்லு, அப்படி நில்லு, இதை அதை செய் என்று கூறி நாம் உருவாக்கினால், அவர்கள் நாட்டை ஆள வேண்டும் என்று வந்து நிற்கிறார்கள். நம்ம முட்டாள் ரசிகர்கள் என்ன செய்வார்கள், அவர்களுக்கு பால் அபிஷேகம் செய்வது, பேனர் வைப்பது என்று இருப்பவர்கள், அவன் நாட்டை ஆள வேண்டும் என்று கூறும்போது, வா...என்று கூறிவிடுகிறார்கள். இதையெல்லாம், ஆரம்பத்திலையே தடுத்து நிறுத்த வேண்டும். பால் அபிஷேகம் செய்யாதே, திரைப்படத்தை பொழுதுபோக்காக பார், என்று கூறியிருந்தால் மக்களும் புத்திசாலியாக இருந்திருபபார்கள். ஆனால், அவர்களை ஏத்திவிட்டு, முட்டாள்ளாக்கிவிட்டு, இப்போது நாட்டை ஆள வருகிறேன், என்று கூறியதும் அவர்கள் என்ன செய்வார்கள், வா....வா...என்று தான் சொல்வார்கள்.
யுரேகா ரொம்பவே திறமை வாய்ந்தவர், அவர் இயக்கிய படங்கள் குறித்து கேட்டு தெரிந்துக்கொண்டேன். இந்த படத்தை கமர்ஷியல் படமாக இயக்கியிருந்தாலும், இதிலும் தமிழ் உணர்வு இருக்கிறது. எங்கள் காலத்தில் இயக்குநர் ஆவது என்பது ரொம்ப கஷ்ட்டம் 45 வயதுக்கு மேலே தான் இயக்குநராக முடியும். ஆனால், இப்போதெல்லாம் இளைஞர்கள் டக்கென்று வந்துவிடுகிறார்கள். திறமையானவர்களாகவும், வித்தியாசமான கதையுடனும் வருகிறார்கள். தற்போதைய சூழலில் சினிமாவில் ஹீரோவாக வெற்றி பெறுவது என்பது ரொம்ப கஷ்ட்டம். 300 பேர் ஓடும் போட்டியில் வெற்றி பெறுவது என்பது பெரிய விஷயம். இப்போதைய சூழல் அப்படி தான் இருக்கிறது. இந்த சூழலில் ஜெய்வந்த் வெற்றி பெற வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்தார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...