தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த ஸ்ரேயா, ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார். திடீரென்று அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் இந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். ஆனால், அங்கும் அவரது படங்கள் தோல்வியடைந்ததால், பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தமிழ் சினிமாவில் கடைசியாக சிம்புடன் ஸ்ரேயா நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து அவருக்கு தொடர் வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. தற்போது ‘நரகாசூரன்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் ஸ்ரேயா, அப்படத்திற்குப் பிறகு தமிழ்ப் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்திருந்தார். ஆனால், பைனான்ஸ் பிரச்சினையால் அப்படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இதற்கிடையே, பட வாய்ப்புகள் இல்லாததால் தனது ரஷ்ய நாட்டு காதலரை திருமணம் செய்துக் கொண்ட ஸ்ரேயா, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால், அவருக்கு வாய்ப்புகள் தான் சரியாக அமையவில்லை.
இந்த நிலையில், ஸ்ரேயா நடித்திருக்கும் இந்திப் படம் ’பாமவுஷ்’ வரும் ஜூன் மாதம் வெளியாக உள்ளது. இப்படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து நடிக்கலாம். அப்படி படம் சரியாக போகவில்லை என்றால், சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, குடும்பத்தை கவனிக்கும் தலைவியாக வாழ்க்கையை தொடரலாம், என்ற முடிவு எடுத்திருக்கிறாராம்.
திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன், என்று ஸ்ரேயா கூறியதும் குஷியடைந்த அவரது ரசிகர்கள், தற்போதைய அவரது புதிய முடிவால் ரொம்பவே ஷாக்காகியுள்ளார்கள்.
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...