விஜய் நடித்த ‘ஷாஜகான்’ படத்தை இயக்கிய ரவி அப்புலு 14 வருடங்களுக்கு பிறகு இயக்கியிருக்கும் படம் ‘செயல்’. இதில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள ராஜன் தேஜேஸ்வர், சினிமா மீது பேரார்வம் மிக்கவராக உள்ளார் என்று சொல்வதற்கு பதிலாக வெறித்தனமாக உள்ளார் என்றே சொல்லலாம்.
சிறு வயதில் இருந்தே சினிமா மீது ஆர்வம் கொண்டவராக இருந்தவர், ஒரு கட்டத்தில் சினிமா மீது வெறிக்கொண்டவராக மாற, அந்த நேரத்தில் தான் இயக்குநர் ரவி அப்புலுவை சந்தித்துள்ளார். தான் எந்த மாதிரியான கதையில் நடிக்க வேண்டும், தான் காத்திருந்தேனோ அந்த மாதிரியான ஒரு கதையை இயக்குநர் ரவி அப்புலு சொன்னதால் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
சரியான தயாரிப்பாளர் கிடைக்காததால் அவரது தந்தையே அப்படத்தை தயாரிக்க, அப்படி தொடங்கப்பட்ட படம் தற்போது அனைத்து பணிகளுடம் முடிவடைந்து மே 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
யானை பலம் கொண்ட ஒருவனை சாதாரண சராசரியான ஒருவன் மோதி சாய்ப்பது தான் ‘செயல்’ படத்தின் ஒன்லைன் கதை.
ஆக்ஷன், காமெடி, காதல் என்று முதல் படத்திலேயே பக்கா கமர்ஷியல் கதையில் நடிச்ச திருப்தியோடு இருக்கும் ராஜன் தேஸ்வரின் நடிப்பில் இப்படம் தரமாக வந்திருப்பதால், தயாரிப்பாளர் சி.ஆர்.ராஜன் உடனே அடுத்த படத்தையும் தொடங்கிவிட்டார்.
சமுத்திரக்கனியின் உதவியாளர் சாய் சங்க இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்திற்கு ‘குமாரு வேலைக்கு போறான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படமும் ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என்று கூறிய ஹீரோ ராஜன் தேஜேஸ்வர், சினிமா மீது தனக்கு ஏற்பட்ட வெறியின் விளைவாக தனது முதல் படம் வெளியாவதற்கு முன்பாகவே தனது இரண்டாவது படம் தொடங்கிவிட்டது, என்று சந்தோஷமாக கூறினார்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...