மாலை போட வந்த ரசிகர் ஒருவரை பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, அடித்து உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக உள்ள பாலகிருஷ்ணா, கர்னூல் மாவட்டத்தில் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள இடைத் தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
நேற்று இரவு கர்னூல் மாவட்டத்துக்கு வந்த அவரை கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பிறகு ஓட்டல் அறைக்கு வந்த அவரை காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். அப்போது பலர் அவருக்கு மலர் மாலை அணிவிக்க முண்டியடித்தனர். இதில் ரசிகர் ஒருவர் எதிர்ப்பாரத விதமாக பாலகிருஷ்ணா மீது விழ, அவரை தூக்கி நிறுத்திய பாலகிருஷ்ணா, அவர் கண்ணத்தில் பளார் என்று அறை விட்டார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சி தற்போது டிவி சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்
மத்திய அரசின் மதிப்புமிக்க் பத்ம விருதுக்கு நடிகர் அஜித்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...
தரமான படைப்புகள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், தனது க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் மூலம் ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ உள்ளிட்ட பல விருது வென்ற திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்...
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்...