கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான ‘அருவி’ பெரும் வெற்றிப் பெற்றது. மக்கள் மட்டும் இன்றி, திரையுலக பிரபலங்களும் இப்படத்தை பாராட்டியதோடு, இதில் அருவி என்ற வேடத்தில் நடித்த நடிகை அதிதி பாலனையும் வெகுவாக பாராட்டினார்கள்.
கடந்த ஆறு மாதங்களாக பாராட்டு மழையில் நனைந்துக் கொண்டிருக்கும் அதிதி பாலனின், அடுத்தப் படம் என்னவாக இருக்கும், என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட, அதிதி தற்போதைக்கு எந்த புதிய படத்திலும் நடிக்கவில்லை என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஒரு படம் ரிலிஸான பிறகு டசன் கணக்கில் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளுக்கு மத்தியில், முதல் படம் வெளியாகி, அதுவும் பெரிய வெற்றி பெற்றுவிட்ட நிலையில், கடந்த ஆறு மாதமாக அதிதி பாலன் எந்த படத்திலும் நடிக்க சம்மதிக்கவில்லை என்பது ஆச்சரியமான அதிர்ச்சி தகவல் தான்.
எதற்காக இந்த வெய்ட்டிங், என்று விசாரித்ததில், இதுவரை 15 க்கும் மேற்பட்ட இயக்குநர்கள் அதிதி பாலனிடம் கதை சொல்லியிருக்கிறார்களாம். எந்த கதையும் அவரை திருப்திப்படுத்தவில்லையாம். தனதுக்கு ‘அருவி’ கொடுத்திருக்கும் நல்ல தொடக்கத்தை எக்காரணம் கொண்டும் கெடுத்துக்கொள்ள விரும்பாத அதிதி பாலன், உலகத் தரத்துக்கு இல்லை என்றாலும், உள்ளூர் தரத்துக்காவது தான் நடிக்கும் படங்கள் தரமாக இருக்க வேண்டும், பணம் மற்றும் பட எண்ணிக்கை எல்லாம் இரண்டாம் பட்சம் தான், என்ற முடிவில் அவர் இருக்கிறாராம்.
80-களின் முன்னணி கதாநாயகியாகவும், ரசிகர்களின் கனவு கண்ணியாகவும் வலம் வந்த நடிகை அம்பிகா, தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நிலையில், அவரது முகத்தோற்றம் கொண்ட ஒரு நடிகையை கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு ஒன்று முயற்சித்து வருகிறது...
இளம் வயது உலக செஸ் சாம்பியனான குகேஷ், நேற்று நடிகர் சிவகார்த்திகேயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்...
’வேற மாரி ஆபிஸ்’, ‘வேற மாறி லைவ் ஸ்டோரி’ தொடர்கள் மற்றும் ‘மால்’, தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்த விஜே பப்பு, ‘ராகவன் : Instinct’ என்ற இணையத் தொடர் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்...