’களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ஓவியா, அப்படத்திற்கு பிறகு சரியான வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சிக்கு மாறினார். அப்படி இருந்தும் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் ஏதும் வரவில்லை. இதனால், “ஓவியா அது யாருயா?” என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு அவர் பின் தங்கியிருந்தார்.
இந்த நிலையில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் டிவி நிகழ்ச்சியான பிக் பாஸில் கலந்துக் கொண்ட ஓவியா, தற்போது தமிழகத்தின் முக்கிய நபர்களில் ஒருவராகியுள்ளார். ‘ஓவியா ராணுவம்’, ‘ஓவியா பாய்ஸ்’, ‘ஓவியா பட்டாளம்’ உள்ளிட்ட பல பெயர்களில் ஓவியாவுக்கு ரசிகர்கள் வட்டம் உருவாகியிருப்பதோடு, அவர் குறித்து தினமும் சமூக வலைதளங்களிலும் பேசப்படுகிறது.
அதே சமயம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு எதிராக கருத்து கூறி வந்த நடிகை காயத்ரி, நடிகர் சக்தி, ஜூலி ஆகியோரை ஓவியா ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருவதோடு, அவர்கள் பற்றி மீம்ஸ்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.
ரசிகர்களின் இத்தகைய செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஓவியா, வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ரொம்ப கஷ்டமான விஷயம் இப்போது நடந்துகொண்டு இருக்கிறது. ஜூலி மற்றும் சக்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டனர். அந்த நிகழ்ச்சியில் என்னை மற்றவர்கள் ஒதுக்கிய போது நான் எப்படி மனதளவில் பாதிக்கப்பட்டேனோ, அதேபோல ஒரு நிலை தற்போது அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, தயவுசெய்து அவர்கள் மீது மோசமான கருத்துக்களை முன்வைக்காதீர்கள். அது என்னுடைய மனதுக்கு கஷ்டமாக உள்ளது.
தவறு எல்லோரும் தான் செய்கிறோம். யாரும் இங்கு சரியாக இல்லை, நான் உள்பட. தவறு செய்தால் தான் மனிதர்கள், இல்லையெனில் அவர்கள் விலங்குகளுக்கு சமம். கொலை, கற்பழிப்பு குற்றவாளிகளை கூட அரசாங்கமே மன்னித்து விடுகிறது. எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்தவை எல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை. அவர்களை தொல்லை செய்யாதீர்கள். நீங்கள் என் மீது வைத்துள்ள அன்பு எனக்கு புரிகிறது. ஆனால், மற்றவர்களை கஷ்டப்படுத்தி என்னிடம் அன்பு காட்ட வேண்டாம். அப்படிபட்ட ரசிகர்கள் எனக்கு தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...