Latest News :

பிக் பாஸ் 2 படப்பிடிப்பு தொடங்கியது!
Friday May-04 2018

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘பிக் பாஸ்’ மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களும் பிரபலமானதோடு, பலர் சினிமாவில் ஹீரோயினாகவும் ஆகியுள்ளார்கள்.

 

இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், இரண்டாம் பாகத்தை கமல்ஹாசன் தொகுத்து வழங்கப்போவதில்லை என்று கூறப்பட்டது. மேலும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சில முன்னணி ஹீரோக்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அவை அனைத்தும் வதந்தி தான் என்று நிரூபித்த தொலைக்காட்சி, இரண்டாம் சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருப்பதாக தெரிவித்தது.

 

இந்த நிலையில், பிக் பாஸ் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை, பூந்தமல்லியில் உள்ள ஸ்டுடியோவில் தொடங்கியுள்ளது. இரண்டாம் சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இன்று நடைபெறும் படப்பிடிப்பு நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவாம். 

 

தற்போது போட்டியாளர்களின் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்க, இறுதி போட்டியாளர்களின் பட்டியல் தயாரானதும், இந்த புரோமோ வீடியோ ஒளிபரப்பட உள்ளதாம்.

Related News

2543

சோனியா அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரார் திரில்லர் ’7G’ ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது!
Tuesday June-25 2024

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்து, எழுதி,  இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், மாறுபட்ட மிரட்டலான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது...

அதர்வா-நிமிஷா சஜயன் நடிக்கும் ’டிஎன்ஏ’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!
Tuesday June-25 2024

ஒலிம்பியா மூவீஸ், மக்களை மகிழ்விக்கும் வகையிலான பல பொழுதுபோக்கு திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது...

’கல்கி 2898 கி.பி’ படத்தின் க்ரோனிக்கிள்ஸ் வீடியோ வெளியானது!
Tuesday June-25 2024

சமீபத்தில் வெளியான டிரெய்லரைத் தொடர்ந்து எட்டுதிக்கும் ’கல்கி 2898 கிபி’ படத்தின் பேச்சாகவே இருக்கிறது...