பாலிவுட்டில் படு ஜோராக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி தென்னிந்தியாவிலும் கடந்த ஆண்டு ஓளிபரப்பானது. தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியை தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார். இரண்டு மொழிகளில் பெரும் வரவேற்பு பெற்ற இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் இரண்டு மொழிகளிலும் வர உள்ளது.
தமிழில் இரண்டாம் பாகத்தை கமல்ஹாசனே தொகுத்து வழங்க இருப்பதாகவும், அதற்கான புரோமோ படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம், தெலுங்கு பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை நடிகர் நானி தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தெலுங்கு பிக் பாஸ் சீசன் 2- வில் தெலுங்கு சினிமாவை திணறடித்த நடிகை ஸ்ரீரெட்டி கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு நடிகர், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது செக்ஸ் புகார் கூறிய ஸ்ரீரெட்டி, நடிகர் சங்கத்திற்கு எதிராக நிர்வாணப் போராட்டத்தையும் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...
‘கயல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின்செண்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டி...