அஜித்தால் வாழ்ந்தவர்கள் தான் அதிகம் கேட்டவர்கள் இல்லை, என்று கோடம்பாக்கமே அவ்வபோது அஜித் புகழ் பாடிக்கொண்டிருக்க, மாநகராட்சி பெண் ஊழியர் ஒருவர் அஜித்தால் தனது ஒரு வருட சம்பளத்தை இழந்துள்ளார். இத்தனைக்கும் அவர் அஜித்தின் தீவிர ரசிகையாம்.
அஜித்தின் அதி தீவிர ரசிகையான ஜெயந்தி என்ற அந்த ஊழியர் சென்னை, கோடம்பாக்கம் மாநகராட்சி மண்டலத்தில் வேலை பார்க்கிறார். அஜித்தின் பிறந்தநாளை தனது ஆபிசுக்குள் கேக் வெட்டி கொண்டாடியவர், மற்ற ஊழியர்களுக்கும் கேக் பறிமாறி தனது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜெயந்தியின் இந்த அஜித் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து, வீடியோ ஆதரத்துடன் மாநகராட்சி கமிஷ்னருக்கு விஷயம் சென்றிருக்கிறது. வீடியோவை பார்த்த கமிஷ்னர் கடுப்பாகி, ஜெயந்தியை கண்டித்ததுடன், அவரது ஒரு வருட சம்பளத்தை நிறுத்தி வைக்க சொல்லி உத்தரவிட்டுள்ளார்.
கோடம்பாக்கம் முழுவதும் இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வந்தாலும், சம்மந்தப்பட்ட ஜெயந்தி எண்ணவோ வாயடைத்து போய் இருக்கிறாராம்.
இதுபோன்ற பைத்தியக்காரத்தனத்தால் தான், தனக்கு ரசிகர்களே வேண்டாம், என்று அஜித் கூறுகிறார்கள் போல.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...