நடிகை பாவனா காரில் கடத்தி கற்பழிக்கப்பட்ட வழக்கில், பிரபல மலையாள நடிகர் திலிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை சிறையில் தள்ளவும், சம்மந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்று தரவும், போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
அதன்படி, பாவனாவுக்கு நெருக்கமாக உள்ள நண்பர்கள் மற்றும் சினிமா பிரபலங்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் ரம்யா நம்பீசனிடம் நேற்று போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
சம்பவம் நடந்த அன்றைய தினம், பாவனா தப்பித்து ரம்யா நம்பீசன் வீட்டிற்கு தான் சென்றுள்ளார். அப்போது அவர் எந்த கோலத்தில் இருந்தார். அவரது மனநிலை எப்படி இருந்தது, அவருக்கு அளிக்கப்பட்ட முதலுதவி உள்ளிட்டவைகள் குறித்து ரம்யா நம்பீசன் போலீசாரிடம் வெளிப்படையாக கூறியியுள்ளதாக கூறப்படுகிறது.
போலீஸ் கிளப்பில் நடைபெற்ற இந்த விசாரணை சுமார் 2 மணி நேரம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
மத்திய அரசின் மதிப்புமிக்க் பத்ம விருதுக்கு நடிகர் அஜித்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...
தரமான படைப்புகள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், தனது க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் மூலம் ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ உள்ளிட்ட பல விருது வென்ற திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்...
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்...