’என் ராசாவின் மனசுல’, ‘சோலையம்மா’, ‘எட்டுப்பட்டி ராசா’, ‘வீரம் வெளஞ்ச மண்ணு’, ‘துள்ளுவதோ இளமை’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ள இயக்குநர் கஸ்தூரி ராஜா, கடைசியாக 2006 ஆம் ஆண்டு வெளியான ‘இது காதல் வரும் பருவம்’ படத்தை இயக்கியிருந்தார்.
இந்த நிலையில், பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படம் இயக்கும் அவர், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷராப்புடன் கைகோர்த்துள்ளார். கஸ்தூரி ராஜா இயக்க இருக்கும் ‘பாண்டி முனி’ படத்தில் ஜாக்கி ஷராப் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் நிகிதா பட்டில் மெஹாலி, வாசு விக்ரம், அம்பிகா, ஃபெரா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இப்படத்திற்கு மது அம்பட் ஒளீப்பதிவு செய்ய, சூப்பர் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும், படம் குறித்த மேலும் பல விபரங்களும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
80-களின் முன்னணி கதாநாயகியாகவும், ரசிகர்களின் கனவு கண்ணியாகவும் வலம் வந்த நடிகை அம்பிகா, தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நிலையில், அவரது முகத்தோற்றம் கொண்ட ஒரு நடிகையை கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு ஒன்று முயற்சித்து வருகிறது...
இளம் வயது உலக செஸ் சாம்பியனான குகேஷ், நேற்று நடிகர் சிவகார்த்திகேயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்...
’வேற மாரி ஆபிஸ்’, ‘வேற மாறி லைவ் ஸ்டோரி’ தொடர்கள் மற்றும் ‘மால்’, தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்த விஜே பப்பு, ‘ராகவன் : Instinct’ என்ற இணையத் தொடர் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்...