புதிய இயக்குநர்களாகட்டும், சில பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர்களாட்டும், தற்போது தாங்கள் எழுதும் கதைகளில் விஜய் சேதுபதியை பொறுத்தி பார்த்துவிட்டு அவரது கால்ஷீட்டுக்காகவும் முயற்சிக்கிறார்கள். கதை பிடித்திருந்தாலும் சம்பளத் தொகையை குறைவாக வாங்கவும் ரெடியாக இருக்கும் விஜய் சேதுபதி, கையில் ஏகப்பட்ட படங்களை வைத்திருந்தாலும், நல்ல கதைகள் சிக்கினால் விடுவதில்லை.
அந்த வகயில் பல வித்தியாசமான படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, ரொம்பவே எதிர்ப்பார்க்கும் படம் ‘ஜுங்கா’. விஜய் சேதுபதியே சொந்தமாக தயாரிக்கும் இந்த படம் அவர் இதுவரை நடித்த படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படமாகும். ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தின் மூலம் விஜய் சேதுபதிக்கு வேறு ஒரு பரிணாமத்தை கொடுத்த கோகுல் தான் ’ஜுங்கா’ வையும் இயக்குகிறார்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் போராட்டத்தை பொருட்படுத்தாமல் வெளிநாட்டுக்கு சென்று படத்தை முடித்துவிட்டு திரும்பியுள்ள விஜய் சேதுபதி, தற்போது டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளார். விறுவிறுப்பாக நடைபெறும் இப்படத்தின் டப்பிங் பணியை முழுக்க முழுக்க இரவில் தான் விஜய் சேதுபதி பேசுகிறாராம்.
பகல் முழுவதும் ஓய்வு எடுத்துக் கொள்பவர், இரவு முழுவதும் ‘ஜுங்கா’ டப்பிங்கில் ஈடுபடுகிறாராம். இந்த இரவு வேலை என்பது விஜய் சேதுபதிக்கு மட்டும் தானாம், ஜுங்கா வில் நடித்திருக்கும் மற்றவர்கள் எல்லாம் எப்போதும் போல பகல் வேலை தான் செய்கிறார்களாம்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...