Latest News :

அரசியல் ஒத்திகை பார்க்கும் ரஜினி - பிரம்மாண்ட கூட்டத்திற்கு ஏற்பாடு!
Friday August-18 2017

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது யார்? என்ற கேள்விக்கு விடை இல்லாமல் தமிழகம் தவித்துக் கொண்டிருக்க, இந்த வெற்றிடத்தை நிரப்ப பல தலைவர்கள் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு மத்தியில், தமிழகத்தின் ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் தற்போது ரஜினிகாந்தும் செயல்பட்டு வருகிறார்.

 

ரஜினிகாந்தின் அரசியல் நடவடிக்கை ஒரு பக்கம் இருக்க, கமல்ஹாசனின் அதிரடி எண்ட்ரியால் தற்போது ஆளும் தமிழக அரசே சற்று ஆட்டம் கண்டு வருகிறது. எது எப்படியோ, தமிழகத்தில் தேர்தல் வரும் போது, ரஜினி அல்லது கமல் இருவரில் ஒருவர் நேரடி அரசியலில் இறங்கப்போவது உறுதியாகிவிட்டது.

 

இந்த நிலையில், தான் அரசியலுக்கு வந்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?, தனது பேச்சு எடுபடுமா? என்பதை சோதித்து பார்க்கும் விதத்தில், பிரம்மாண்ட கூடம் ஒன்றை நடத்த ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார்.

 

திருச்சியில் வரும் ஆகஸ் 20 ஆம் தேதி நடத்தப்பட உள்ள இந்த கூட்டத்தில் ரஜினிகாந்த் நேரடியாக பங்கேற்கவில்லை என்றாலும், இது முழுக்க முழுக்க ரஜினிகாந்தின் அரசியல் ஒத்திகைக்கான கூட்டம் என்றே கூறப்படுகிறது.

 

ரஜினிகாந்தின் நண்பரும், அரசியல் ஆலோசகருமான காந்திய மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன் மூலம் நடத்தப்படும் இந்த கூட்டத்திற்கு, ரசிகர்கள் திரளாக பங்கேற்க வேண்டும், என்று ரஜினி தலைமை ரசிகர் மன்றத்தில் இருந்து, அனைத்து மாவட்ட ரசிகர் மன்றத்திற்கும் ரகசிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாம். மேலும், கூட்டத்தில் ஒவ்வொறு மன்றத்தில் இருந்தும் எத்தனை பேர் கலந்துக் கொள்கிறார்கள் என்பதை தலைமை மன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருப்பதோடு, கூட்டத்தில் பேசப்படும் கருத்துக்களை கவனமாக கேட்டு, பின் அது பற்றி தங்களது கருத்துக்களை தலைமை மன்றத்திடம் தெரிவிக்க வேண்டும், என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

Related News

257

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் விநாயகராஜ்!
Saturday December-21 2024

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...

சாதனை பயணத்திற்கு பாதை அமைத்து தந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஜிவி பிரகாஷ் குமார்!
Saturday December-21 2024

முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...

”பாலா அண்ணன் என்கிற ஒரு வார்த்தை வெறும் வார்த்தையல்ல” - சூர்யா உருக்கம்
Friday December-20 2024

1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...

Recent Gallery