தொலைக்காட்சி பார்க்க விரும்பாதவர்களை கூட, டிவி முன்பு உட்கார வைத்த நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதோடு, இதில் பங்கேற்ற போட்டியாளர்களும் மக்களிடம் பெரும் பிரபலமானதால், இந்த நிகழ்ச்சியின் மீது பிரபலங்களிடமும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இதற்கிடையே, இப்போட்டியின் இரண்டாம் கட்டமான ‘பிக் பாஸ் - சீசன் 2’ வரும் ஜூன் மாதம் முதல் தொடங்க இருக்கிறது. இதற்கான புரோமோ படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தைக் காட்டிலும், இரண்டாம் பாகத்தில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பிரபலமானவர்களாக இருப்பார்கள் என்பதால், இப்போட்டியின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிம் பாஸ் 2-வில் பங்கேற்பவர்களின் பட்டியல் என்று ஒரு விபரம் வெளியாகி வைரலாகி வருகிறது. இது அதிகாரப்பூவமான பட்டியல் இல்லை என்றாலும், இதுவரை இந்த பட்டியலுக்கு சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி இதுவரை மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.
இதோ அந்த பட்டியல்,
இனியா
கஸ்தூரி
ராய்லக்ஷ்மி
லட்சுமி மேனன்
ஜனனி ஐயர்
சுவர்ணமால்யா
பூனம் பாஜ்வா
ப்ரியா ஆனந்த்
நந்திதா
பரத்
ஷாம்
சாந்தனு
அசோக் செல்வன்
ஜித்தன் ரமேஷ்
ஜான் விஜய்
படவா கோபி
பவர் ஸ்டார்
ப்ரேம்ஜி
யூகி சேது
விஜய் வசந்த்
நாஞ்சில் சம்பத்
பால சரவணன்
ப்ளாக் பாண்டி
சாரு நிவேதா
தாடி பாலாஜி
டேனியல் ஆனி போப்
ஆலியா மானசா
ரக்ஷிதா
கீர்த்தி சாந்தனு
அமித் பார்கவ்
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...
‘கயல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின்செண்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டி...