கமல்ஹாசன் இயக்கி நடித்த ‘விஸ்வரூபம்’ பெரும் வெற்றி பெற்றாலும், வெளியாவதற்கு முன்பு பல சர்ச்சைகளில் சிக்கியது. தமிழகத்தில் வெளியாகமல் பிற மாநிலங்களில் வெளியான அப்படம், பல தடைகளை கடந்து தமிழகத்தில் வெளியானது.
தற்போது ‘விஸ்வரூபம்-2’ படத்தை முடித்திருக்கும் கமல்ஹாசன், அப்படத்தை இம்மாத இறுதிய்ல் அல்லது அடுத்த மாதம் வெளியிட தயாராகி வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கு தமிழில் பல சர்ச்சையான காட்சிகள் நீக்கப்பட்டு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தி பதிப்பை பார்த்த சென்சார் குழுவினர் பல காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்களாம். மொத்தம் 17 காட்சிகளை நீக்கினால் தான் சான்றிதழ் கொடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கு படக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், காட்சிகளை நீக்க வேண்டும் என்பதில் தணிக்கை குழுவினர் பிடிவாதமாக இருந்ததால், அவர்கள் நீக்க சொன்ன காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. பிறகு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...
ஸ்கை வண்டர்ஸ் எண்டர்டெயின்மென் நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது...
தமிழ் சினிமாவில் நெஞ்சை தொட்ட காதல் காவியமாக 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் '7ஜி ரெயின்போ காலனி' ...